News December 25, 2025
பெரம்பலூர்: கற்பழிப்பு குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

பெரம்பலூர் மாவட்டம் கல்பாடி, கிராமத்தைச் சேர்ந்த மனநல பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் தொந்தரவு மற்றும் கற்பழிப்பு செய்ததாக ராஜீ (55) என்பவர் மீது, கடந்த 2022ம் ஆண்டு கற்பழிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டது. தொடர் விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் குற்றவாளி ராஜிவுக்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் ரூ.1,00,000 அபராதம் விதித்து, பெரம்பலூர் மாவட்ட மகிளா நீதிமன்றம் இன்று தண்டனை வழங்கியது.
Similar News
News December 28, 2025
பெரம்பலூர்: நகரும் நியாயவிலை கடை திறப்பு

பெரம்பலூர் மாவட்டம் நரசிங்கபுரம் கிராமத்தில், புதிய நகரும் நியாயவிலை கடையினை நேற்று, பெரம்பலூர் சட்ட மன்ற உறுப்பினர் பிரபாகரன் துவக்கி வைத்து, பொதுமக்களுக்கு பொருட்களை வழங்கினார். இந்த நிகழ்வில் திமுக கிளை கழக பொறுப்பாளர்கள் மற்றும் திமுக கிளை கழக நிர்வாகிகள், செயலாளர்கள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
News December 28, 2025
பெரம்பலூர்: குளத்தில் மூழ்கி பரிதாப பலி!

ஆலத்தூரை அடுத்த நாட்டார்மங்கலம் கிராமத்தில் கல்குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்குவாரி குட்டையில் தேங்கி நிற்கும் தண்ணீரை குடிப்பதற்காக புள்ளிமான் ஒன்று வந்துள்ளது. அப்போது எதிர்பாராத விதமாக அந்த புள்ளிமான் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தது.. தகவலின்பேரில் விரைந்து வந்த வனத்துறையினர் மானை மீட்டு பிரேத பரிசோதனை செய்து புதைத்தனர்.
News December 28, 2025
பெரம்பலூர்: நாட்காட்டி வழங்கும் நிகழ்ச்சி

பெரம்பலூர், தேனூர் அருகே இன்று (27.12.2025) கல்வி, மகளீர் மேம்பாடு, சமூக சேவைகளில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வரும் கற்பக விருட்சம் அறக்கட்டளை புகைப்படம் அடங்கிய 2026 ஆம் ஆண்டுக்கான, நாட்காட்டி மற்றும் தண்ணீர் பாட்டில் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அறக்கட்டளை நிறுவனர் சத்திய நாராயணன் முன்னிலை வகித்து, அனைவருக்கும் மதிய உணவு வழங்கினார், ரமேஷ் நவநீதன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.


