News December 25, 2025
தலை குந்தாவிற்கு செல்ல வனத்துறை கட்டுப்பாடு!

நீலகிரியின் காஷ்மீர் என அழைக்கப்படும் தலைகுந்தா வனப்பகுதிக்கு செல்ல வனத்துறையினர் நேற்று முதல் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். புல்வெளிகள் மற்றும் வனப்பகுதிக்குள் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் செல்ல முழுமையாக அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தடையை மீறுபவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறியுள்ளனர்.
Similar News
News December 31, 2025
BREAKING: ஊட்டி வந்தார் தமிழக ஆளுநர்

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி 5 நாள் பயணமாக ஊட்டி வந்துள்ளார். மேலும் நாளை புத்தாண்டு கொண்டாடப்படும் நிலையில் குடும்பத்துடன் புத்தாண்டு கொண்டாட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று ஊட்டி வந்த கவர்னரை ராஜ்பவன் மாளிகையில் கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரூ வரவேற்றார்.
News December 31, 2025
நீலகிரி: தாசில்தார், VAO லஞ்சம் கேட்டா.. இத பண்ணுங்க

நீலகிரி மாவட்டத்தில் தாசில்தார், வி.ஏ.ஓ போன்ற அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் செய்யலாம். நீலகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் எண் 0423-2443962 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் செய்யலாம். லஞ்சம் தவிர்க்க தயக்கம் இன்றி புகார் செய்யுங்கள். (SHARE பண்ணுங்க)
News December 31, 2025
பந்தலூர் அருகே விபத்து

பந்தலுார் பஜாரின் மையப்பகுதியில் உள்ள உயர் அழுத்த மின் கம்பம் மீது இவ்வழியாக வந்த லாரி ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. அதில், மின்கம்பம் வளைந்தது. பெரிய அளவிலான விபத்து ஏதும் ஏற்படவில்லை. பாதிக்கப்பட்ட பகுதியில் மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து, லாரி உரிமையாளர் சார்பில் மின்கம்பத்தை சீரமைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.


