News December 25, 2025

நாமக்கல் ஆட்சியர் அறிவிப்பு!

image

நாமக்கல் வனக்கோட்டத்தை சேர்ந்த 20 ஈரநிலங்களில் வரும் டிச.27 மற்றும் டிச.28 ஆகிய தேதிகளில் ஈரநில பறவைகள் கணக்கெடுப்பு நடைபெற உள்ளது. இதில் தன்னார்வலர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பறவைகளின் அசைவு பற்றிய புகைப்படம் எடுக்க ஆர்வம் உள்ள புகைப்பட வல்லுனர்கள், மற்றும் பறவை நிபுணர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு ஆட்சியர் துர்காமூர்த்தி கேட்டுக் கொண்டுள்ளார்.

Similar News

News January 10, 2026

இன்றைய கறிக்கோழி, முட்டை விலை நிலவரம்

image

நாமக்கல் மண்டலத்தில் இன்றைய (10-01-2026) காலை நிலவரப்படி, கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை (உயிருடன்) ரூ. 142- ஆகவும், முட்டை கோழி விலை கிலோ ரூ.90- ஆகவும் விற்பனையாகி வருகின்றது. அதேபோல் முட்டை கொள்முதல் விலை ரூ. 5.60- ஆக நீடித்து வருகிறது. முட்டையின் தேவை குறைந்துள்ளதால் முட்டை விலை படிப்படியாக சரிவடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

News January 10, 2026

நாமக்கல்: ரேஷன் ஊழியர்கள் மீது புகார் செய்வது எப்படி?

image

ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, தேவையான பொருட்களுக்கு பதிலாக மற்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) நாமக்கல் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணி அவங்களுக்கும் தெரியப்படுத்துங்க

News January 10, 2026

நாமக்கல் ரயில் பயணிகள் கவனத்திற்கு

image

திருநெல்வேலி – ஷிமோகா (06103/06104) இடையேயான வாராந்திர சிறப்பு ரயில் நாளை (ஜனவரி 11) முதல் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இரவு 11:55 மணிக்கு நாமக்கல் ரயில் நிலையத்திற்கு வந்தடையும். அங்கிருந்து புறப்பட்டு பங்காரபேட், கிருஷ்ணராஜபுரம், பெங்களூரூ, சிக்பானவர், டும்குரு, அரசிகெரே, பிரூர், பத்ராவதி வழியாக ஷிமோகா சென்றடையும். இந்த ரயிலுக்கான முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

error: Content is protected !!