News May 1, 2024

தென்காசி: குடிநீர் சேவை கட்டுப்பாட்டு எண்கள் அறிவிப்பு

image

தென்காசி மாவட்டத்தில் மே, ஜூன் மாதங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏதும் இருந்தால் பொதுமக்கள் அதற்கான கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டு அறை ஊராட்சி உதவி இயக்குனர் அலுவலக தொலைபேசி எண் 04633 295891 மற்றும் 8148230 265 என்று தொலைபேசி எண்களிலும், சுகாதார குறைபாட்டிற்கு 96 00212 764 என்ற எண்களிலும் தகவல் தெரிவிக்கலாம் என கலெக்டர் கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.

Similar News

News March 12, 2026

தென்காசி: ரூ.2,40,000 சம்பளத்தில் வேலை ரெடி! உடனே APPLY

image

HPCL (இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்) நிறுவனத்தில் காலியாக உள்ள 730 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 18 – 45 வயதுகுட்பட்ட Diploma, Any Degree, B.E/B.Tech படித்தவர்கள் மார்ச் 25க்குள் இங்கு <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு சம்பளம் ரூ.30,000 – 2,40,000 வரை சம்பளம் வழங்கப்படும். எழுத்துத் தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். SHARE IT.

News March 12, 2026

தென்காசி: OPS அணி நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர்

image

தென்காசி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் முன்னிலையில் மதுரையில் திமுகவில் இணைந்து கொண்ட, தென்காசி மாவட்ட ஒபிஎஸ் அணி நிர்வாகிகளை வரவேற்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் ஜெயபாலன் தலைமை வகித்து வரவேற்று பேசினார். இதில் மாவட்ட ஒன்றிய நகர திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

News March 12, 2026

தென்காசியில் 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது.!

image

தென்காசி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், 11 கிலோ கஞ்சா கடத்தியதாக, விக்னேஷ் (32), இசக்கிக்குமார் (31), பேச்சிமுத்து (30) ஆகியோர் கடந்த பிப்., மாதம் கைது செய்யப்பட்டனர். இவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G.S மாதவன், ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து ஆட்சியர் கமல்கிஷோர் உத்தரவின்படி 3 பேரும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.

error: Content is protected !!