News December 25, 2025
விளையாட்டு அரங்கத்திற்கு அடிக்கல் நாட்டிய அமைச்சர்

ஜோகில்பட்டி ஊராட்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பின்படி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை சார்பில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் அமையவிருக்கும் முதலமைச்சர் சிறு விளையாட்டு அரங்கத்திற்கான கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் தமிழக நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம்தென்னரசு கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.
Similar News
News January 9, 2026
சிவகாசி: தி.மு.க.,வில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளரான முன்னாள் சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் பாலகங்காதரன் திமுகவில் இணைந்தனர். 1991-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சிவகாசி சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட பாலகங்காதரன் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினரானது குறிப்பிடத்தக்கது.
News January 8, 2026
BREAKING சிவகாசி தொழிலாளிக்கு 82 ஆண்டுகள் சிறை

சிவகாசி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 14 வயது சிறுமி. இவரை
சித்தப்பா முறையான தாயின் தங்கை கணவர் ஓரண்டாக பாலியல் தொல்லை அளித்து வந்துள்ளார். இதையடுத்து சிறுமிக்கு கடந்த 2021-ம் ஆண்டு குழந்தை பிறந்துள்ளது. இந்த வழக்கில் ஸ்ரீவி.,போக்சோ நீதிமன்ற நீதிபதி குற்றவாளிக்கு 4 பிரிவுகளில் தலா 20 ஆண்டுகள், கொலை மிரட்டலுக்கு 2 ஆண்டுகள் என 82 ஆண்டுகள் சிறை தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டார்.
News January 8, 2026
விருதுநகர் அருகே ஒருவர் எரித்துக் கொலை?

விருதுநகர் ஆத்துப்பாலம் அருகே நேற்று இரவில் அடையாளம் தெரியாத ஆண் உடல் எரிந்த நிலையில் கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் அல்லம்பட்டியை சேர்ந்த பொன்ராஜ்(32) தனது நண்பர்களுடன் மது அருந்தியதாக கூறப்படுகிறது. அப்போது ஏற்பட்ட தகராறில் பொன்ராஜை அடித்து கொலை செய்து தீ வைத்து எரித்திருக்கலாம் என கூறப்படும் நிலையில் ஒருவரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


