News December 25, 2025
விருது பெற்ற வீராங்கனைக்கு கலெக்டர் வாழ்த்து

மாவட்ட சமூக நல அரசு சேவை இல்ல குழந்தைகளுக்கு கராத்தே பயிற்சி கற்று தரும் பயிற்றுநரான கருங்குளம் பகுதியை சேர்ந்த கீதா என்பவருக்கு
தென்னிந்திய பெண் சாதனையாளர் விருதில் தலை சிறந்த பெண் விளையாட்டு வீராங்கனை என்ற விருது பெங்களூரில் வழங்கப்பட்டது. இதையடுத்து நெல்லை கலெக்டர் சுகுமாரை சந்தித்து விருதினை காண்பித்து வாழ்த்து பெற்றார்.
Similar News
News January 14, 2026
பாளை மத்திய சிறையில் போலீசார் திடீர் ஆய்வு

பாளையங்கோட்டை மத்திய சிறையில் 1200-க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். இங்கு தடை செய்யப்பட்ட பொருட்கள் உள்ளனவா என்பது குறித்து அவ்வப்போது மாநகர போலீசார் ஆய்வு நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று போலீஸ் கமிஷனர் மணிவண்ணன் உத்தரவின் படி ஒவ்வொரு அறையாக போலீஸ் படையினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற இந்த ஆய்வால் சிறை வளாகம் பரபரப்புடன் காணப்பட்டது.
News January 14, 2026
நெல்லை: 50% தள்ளுபடியில் ரூ.3 லட்சம் கடன்

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <
News January 14, 2026
நெல்லை: பண மோசடி குறித்து போலீசார் எச்சரிக்கை

நெல்லை மாநகர காவல்துறை சார்பில் செய்தி குறிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், உங்களது செல்போனில் ஆன்லைன் பகுதி நேர வேலை என கூறி டாஸ்க் வைத்து சிறிது பணத்தை உங்கள் கணக்கில் காண்பித்து நம்ப வைத்து உங்களிடம் இருந்து பணத்தை பறிக்கும் மோசடி நிகழ்வுகள் தற்போது அதிக அளவில் நடைபெறுகின்றன. இதில் பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என்றும், இது குறித்து 1930-க்கு புகார் அளிக்கலாம் என தெரிவித்துள்ளனர்.


