News May 1, 2024

பேருந்து மோதி கல்லூரி மாணவர் பலி

image

சென்னை பெரம்பூரில் இருந்து வியாசர்பாடி செல்லும் சாலையில் கல்லூரி மாணவர் விஷ்வா இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த மாநகரப் பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே விஷ்வா பலியானார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் மாநகரப் பேருந்து ஓட்டுநர் சுரேஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News

News March 13, 2026

சென்னை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

image

சென்னை மாவட்டத்தில் இன்று (மார்ச்.13) இரவு 10 மணி முதல் இன்று (மார்ச்.13) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News March 13, 2026

சென்னை: ரேஷன் அட்டையில் திருத்தமா?

image

சென்னையில் உள்ள உணவுப் பொருள் வழங்கல் & நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் 19 மண்டல உதவி ஆணையாளர் அலுவலகங்களில் நாளை பொதுமக்கள் குறைதீர் முகாம் நடைபெற உள்ளது. காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறவுள்ள இந்த முகாமில், குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல்/ பெயர் நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை / நகல் அட்டை, கைப்பேசி எண் பதிவு ஆகியவற்றில் மாற்றம் செய்யலாம். ஷேர் பண்ணுங்க.

News March 13, 2026

சென்னை: பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை!

image

சென்னை திருவொற்றியூரை சேர்ந்தவர் அசோக்குமார் (38). இவர் அதேப் பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் இவரது கடைக்கு நேற்று அதேப் பகுதியை சேர்ந்த +1 படிக்கும் 17 வயது மாணவி, பொருள் வாங்க வந்த போது, அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதில் அதிர்ச்சியடைந்த மாணவி பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் அசோக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

error: Content is protected !!