News December 24, 2025
ஜனவரி 1 முதல் சம்பளம் உயருகிறது!

ஜனவரி 1-ம் தேதி முதல் 8-வது ஊதியக் குழு அமலுக்கு வர வாய்ப்புள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர். இதனால் மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளம் 20% – 35% வரை உயரலாம். கடந்த 2025 நவம்பரில் 8-வது ஊதியக் குழு அமைக்கப்பட்ட நிலையில், உயர்த்தப்பட்ட சம்பளம் & ஓய்வூதியம் 2026 ஜனவரியிலிருந்து அமல்படுத்தப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இத்தகவல் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
Similar News
News January 17, 2026
கடலூர்: நீங்களும் இ-சேவை மையம் தொடங்கலாம்!

தற்போதைய நவீன காலகட்டத்தில் அரசின் பல்வேறு நலத்திட்டங்களுக்கு இ-சேவை மையங்கள் வாயிலாகவே விண்ணப்பிக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே தமிழகத்தில் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில் சொந்தமாக இ-சேவை மையங்கள் தொடங்கிட அரசு அனுமதிக்கிறது. இதில் விருப்பமுள்ளவர்கள் <
News January 17, 2026
தங்கம், வெள்ளி.. ஒரே நாளில் விலை ₹4,000 மாற்றம்

தங்கம் சவரனுக்கு ₹400 அதிகரித்த நிலையில், வெள்ளி விலையும் இன்று(ஜன.17) கிலோவுக்கு ₹4,000 அதிகரித்துள்ளது. இதனால், சில்லறை விலையில் 1 கிராம் வெள்ளி ₹310-க்கும், மொத்த விற்பனையில் பார் வெள்ளி 1 கிலோ ₹3,10,000-க்கும் விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் வெள்ளியின் விலை 1 அவுன்ஸ்(28) 2 டாலர்கள் குறைந்துள்ள போதிலும், இந்திய சந்தையில் வெள்ளி விலை உயர்வைக் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
News January 17, 2026
விஜய்க்கு மக்கள் ஆதரவு எவ்வளவு? காங்., ரகசிய சர்வே!

விஜய்க்கு மக்கள் செல்வாக்கு எவ்வளவு இருக்கிறது என காங்., ரகசிய சர்வே எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. அதில், 100-ல் 61 பேர் தவெகவிற்கும், 23 பேர் திமுக கூட்டணிக்கும், 15 பேர் அதிமுக கூட்டணிக்கும் வாக்களித்திருக்கிறார்களாம். மேலும், மாணவர்களுக்கு லேப்டாப் கொடுத்த பின் மீண்டும் சர்வே எடுத்தபோது, 71% வாக்குகள் தவெகவுக்கு வந்திருக்கிறதாம். காங்., கூட்டணி நிலைப்பாட்டில் இது தாக்கத்தை ஏற்படுத்துமா?


