News December 24, 2025

Air Purifier மீதான GST-யை கட் பண்ணுங்க: HC

image

டெல்லியில் காற்றுமாசு உச்சத்தில் இருந்து வரும் நிலையில், மத்திய அரசின் செயல்பாடுகள் மீது டெல்லி ஐகோர்ட் அதிருப்தி தெரிவித்துள்ளது. Air Purifier-ஐ மருத்துவ சாதனமாக கருதி, 18%-ல் இருந்து 5% ஆக GST-ஐ குறைக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஐகோர்ட் விசாரித்தது. அப்போது, தூய்மையான காற்றை வழங்க முடியாவிட்டால், குறைந்தபட்சம் Air Purifier-கள் மீதான வரியையாவது குறையுங்கள் என்று காட்டமாக தெரிவித்துள்ளது.

Similar News

News December 26, 2025

BREAKING: பாமகவில் இருந்து GK மணியை நீக்கிய அன்புமணி

image

பாமக கெளரவத் தலைவரும், MLA-வுமான GK மணியை கட்சியில் இருந்து நீக்குவதாக அன்புமணி அறிவித்துள்ளார். கட்சிக்கு விரோதமான செயல்பாடுகளில் ஈடுபட்டு வருவதால் இந்த நடவடிக்கையை எடுப்பதாக அன்புமணி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். முன்னதாக, கட்சிக்கு எதிராக பொதுவெளியில் பேசி வருவது குறித்து விளக்கம் அளிக்க கோரி GK மணிக்கு, அன்புமணி கடந்த வாரம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

News December 26, 2025

BREAKING: விருப்பமனு அவகாசத்தை நீட்டித்த அதிமுக

image

அதிமுக சார்பில் 2026 தேர்தலில் போட்டியிட விரும்புவோர் விருப்பமனு அளிக்க மேலும் 4 நாள்கள் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த 15-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை விருப்பமனுக்கள் பெறப்பட்டன. இதில், சுமார் 9,000 பேர் விருப்பமனுக்களை அளித்துள்ளனர். இந்நிலையில், வரும் 28-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை காலை 10 – மாலை 5 மணி வரை விருப்பமனுவை வழங்கலாம் என EPS புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

News December 26, 2025

அதிமுக கூட்டணி.. திடீரென முடிவை மாற்றினார்

image

NDA கூட்டணியில் தொடர்வேனா இல்லையா என்பதை உறுதியாக சொல்ல முடியாது என தமமுக தலைவர் ஜான் பாண்டியன் கூறியுள்ளார். பொதுமக்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்களிடம் கருத்து கேட்ட பிறகு, ஜனவரி இறுதியில் கூட்டணி முடிவை எடுப்பேன் என்று அவர் தெரிவித்துள்ளார். EPS-ன் தென்மாவட்ட பிரசாரங்களில் பங்கேற்றிருந்த ஜான்பாண்டியன், தற்போது பிடிகொடுக்காமல் பேசியிருப்பது NDA கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!