News December 24, 2025

தஞ்சாவூர்: பண கஷ்டத்தை நீக்கும் அற்புத கோயில்!

image

தஞ்சை மக்களே செல்வம் என்பது முக்கியமான ஓன்று. பணக்கஷ்டத்தை நீக்கி செல்வம் அருளும் தஞ்சபுரீஸ்வரர் கோயில் நம் தஞ்சாவூரில் அமைந்துள்ளது. குபேரன் தன் செல்வங்களை இழந்து இங்குள்ள சிவனை வழிபட்டதில் அவருக்கு அனைத்து செல்வங்களும் மீண்டும் கிடைக்கப் பெற்றதாக கூறப்படுகிறது. செல்வம் இழந்தவர்கள் இங்கு வழிபட்டால் செல்வம் பெருகும் என்பது இப்பகுது மக்களின் நம்பிக்கையாக உள்ளது. இதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

Similar News

News January 12, 2026

தஞ்சாவூர்: காருக்குள் சிக்கிய பெண் குழந்தை!

image

தஞ்சாவூர், பாபநாசத்தில் உள்ள புகையிரத வீதியில் நேற்று (ஜன.11) காருக்குள் பெண் குழந்தை சிக்கிக்கொண்டுள்ளது. இதனை அடுத்து அந்த குழந்தையின் பெற்றோர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பாதுகாப்பாக குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

News January 12, 2026

தஞ்சை: காங்கிரசார் உண்ணாவிரதப் போராட்டம்

image

தஞ்சையில் 100 நாள் வேலை திட்டத்தில் மகாத்மா காந்தி பெயரை நீக்கிய மத்திய அரசை கண்டித்து, காங்கிரஸ் கட்சியினர் நேற்று தஞ்சை தலைமை தபால் நிலையம் அருகில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் பி.ஜி. ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மேலும் இந்த போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

News January 12, 2026

தஞ்சை: சாலை விபத்தில் எலக்ட்ரீசியன் பலி

image

மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுதன் (25). இவர் கும்பகோணத்தில் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்துள்ளார். சம்பவத்தன்று இவர் வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி சென்றுள்ளார். அப்போது திருபுவனம் மெயின் ரோட்டில் இவருக்கு முன்னால் சென்ற காரில் திடீரென பிரேக் போடப்பட்டதால், இவர் காரில் மோதியுள்ளார். இதில் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

error: Content is protected !!