News December 24, 2025
தென்காசி: மரத்தில் தூக்கிட்டு ஒருவர் தற்கொலை

தென்காசி மாவட்டம், புளியங்குடி, சிந்தாமணி அம்பேத்கர் தெருவை சேர்ந்த முனீஸ்வரன் மகன் செல்லப்பா (45) என்பவர், இன்று புளியங்குடி – ராஜபாளையம் மெயின் ரோட்டில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த தகவலறிந்த புளியங்குடி காவல்துறையினர் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்தவர் உடலை உடற்கூறு ஆய்வுக்காக புளியங்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Similar News
News January 1, 2026
தென்காசி: கடைகள் ஏல அறிவிப்பு

தென்காசி ஊராட்சி ஒன்றியம் பிரானூர் ஊராட்சிக்கு சொந்தமான வணிக வளாகக் கடைகளை வரும் ஜனவரி 12ஆம் தேதி திங்கட்கிழமை காலை 11 மணியளவில் ஊராட்சி மன்ற அலுவலக கூட்டரங்கில் வைத்து ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் அனைத்து கடைகளும் வாடகைக்கு பொது ஏலம் விடப்பட உள்ளது. கடையை வாடகைக்கு ஏலம் எடுப்பவர்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம் என்று பிரானூர் ஊராட்சி தரப்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.
News January 1, 2026
தென்காசி: Driving Licence-க்கு முக்கிய Update!

தென்காசி மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல்<
News January 1, 2026
தென்காசி: 10th முடித்தால் ரூ.37,000 சம்பளத்தில் வங்கி வேலை!

தென்காசி மக்களே, தனியார் வங்கியான பெடரல் வங்கியில் அலுவலக உதவியாளர் பணிகளுக்கு பல்வேறு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18 வயது நிரம்பிய 10ஆம் வகுப்பு படித்தவர்கள் இங்கு <


