News May 1, 2024
ஆந்திராவில் பாஜக கூட்டணியில் விரிசல்

மக்களவைத் தேர்தலுடன் சட்டப்பேரவைத் தேர்தலும் நடக்கும் ஆந்திராவில் தெலுங்கு தேசம்- பாஜக -ஜனசேனா கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. நேற்று தெ.தேசம், ஜனசேனா கட்சிகள் கூட்டாக தேர்தல் அறிக்கையை வெளியிட, அந்நிகழ்ச்சியில் பங்கேற்ற மாநில பாஜக பொறுப்பாளர் தேர்தல் அறிக்கையை வாங்க மறுத்துவிட்டார். தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற பல்வேறு வாக்குறுதிகளில் உடன்பாடு இல்லாததால் பாஜக எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
Similar News
News March 10, 2026
கேஸ் தட்டுப்பாடு.. PM-ஐ Resign செய்ய சொல்லி கோஷம்

எரிபொருள் தட்டுப்பாட்டை தடுக்க மத்திய அரசு தவறிவிட்டதாக எதிர்க்கட்சிகள் லோக்சபாவில் அமளியில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக PM மோடி பதவி விலக வேண்டும் என அவர்கள் கோஷமிட்டதோடு, SIR பணிகளுக்கும் தங்களது எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், எதிர்கட்சி MP-களின் கடும் அமளியிலும் அவை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
News March 10, 2026
அத்தியாவசியப் பொருள்கள் சட்டம்(ECA) என்றால் என்ன?

GAS சிலிண்டர் விவகாரத்தில் Essential Commodities Act-ஐ <<19343648>>மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது<<>>. 1955-ம் ஆண்டு ECA சட்டம் மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருள்களின் தடையற்ற விநியோகத்தை உறுதி செய்கிறது. அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவு தானியங்களான உணவு பொருள்களின் பதுக்கல், கள்ளச்சந்தையை தடுக்கும் நோக்கில் இந்த சட்டம் கொண்டுவரப்பட்டது. இதை மீறுவோருக்கு 3 மாதங்கள் முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும்.
News March 10, 2026
BREAKING: இந்திய அணிக்கு ₹131 கோடி பரிசு

T20 WC கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பிசிசிஐ ₹131 கோடி பரிசு அறிவித்துள்ளது. இந்த பரிசுத் தொகை அணியின் 15 வீரர்கள், பயிற்சி ஊழியர்கள் மற்றும் பிற துணை ஊழியர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும். வெகுமதித் தொகையில் பெரும்பகுதி வீரர்களுக்கும், துணை ஊழியர்களின் தொகை அவர்களது படிநிலைக்கு ஏற்ப தீர்மானிக்கப்படும்.


