News May 1, 2024
டி20 WC: ஆஸ்திரேலியா அணி அறிவிப்பு

மிட்செல் மார்ஷ் தலைமையிலான 15 பேர் கொண்ட டி20 உலகக் கோப்பை தொடருக்கான அணியைத் ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது. அதில், கம்மின்ஸ், ஆகர், டிம் டேவிட், எல்லிஸ், கிரீன், ஹேசில்வுட், ஹெட், இங்கிலிஸ், மேக்ஸ்வெல், ஸ்டார்க், ஸ்டோய்னிஸ், வேட், வார்னர், ஜாம்பா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். நடப்பு ஐ.பி.எல் தொடரில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஸ்மித், மெக்குர்க் போன்ற வீரர்களுக்கு இடம் மறுக்கப்பட்டுள்ளது.
Similar News
News March 23, 2026
சிவகுமாரை கடுமையாக சாடிய ப்ளூ சட்டை மாறன்

வீட்டு சாப்பாட்டை மனைவி என்றும், <<19450052>>ஹோட்டல் சாப்பாட்டை நடிகை எனவும் சிவகுமார்<<>> பேசியது சர்ச்சையானது. இந்நிலையில் ஹோட்டல் சாப்பாடும், நடிகைகளும் ஒன்றா? அவர்களுக்கு குடும்பம் இல்லையா என ப்ளூ சட்டை மாறன் கேள்வி எழுப்பியுள்ளார். பெண்கள் பற்றிய உங்கள் பார்வை இவ்வளவு கீழ்த்தரமானதா? நடிகையை மணம் செய்த உங்கள் மகன் சூர்யா இக்கருத்தை ஏற்பாரா? ஏன் இப்படி உளறுகிறீர்கள்? என கடும் கோபத்துடன் சாடியுள்ளார்.
News March 23, 2026
டாக்டர்கள் வெள்ளை, Lawyers கருப்பு: Coat சீக்ரெட் தெரியுமா?

*வெள்ளை நம்பிக்கை & நேர்மையின் சின்னமாக கருதப்படுகிறது. உளவியல் ரீதியாக நோயாளிகளை அமைதிப்படுத்த வெள்ளை கலர் உதவுமாம் *கருப்பு அதிகாரம் & நடுநிலையை குறிக்கிறதாம். அதே போல இது தவிர, கருப்பு குறைவான குறைகளை வெளிகாட்டுகிறதாம். தொழில்நுட்ப ரீதியாக, எந்த நிறத்தையும் அணியலாம் என்றாலும், நிறத்தை மாற்றுவது ஒரு தொழிலின் தீவிரத்தன்மையை பாதிக்கக்கூடும் என்பதால்தான், இந்த கலர் கோட் அணிவதை பின்பற்றுகின்றனர்.
News March 23, 2026
வியாழக்கிழமை பள்ளிகள் விடுமுறை

புதுச்சேரி பேரவைக்கான வாக்குப்பதிவு ஏப்.9-ல் ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இந்நிலையில், அன்றைய தினம் புதுவையில் உள்ள பள்ளி, கல்லூரிகள், அரசு, தனியார் துறை அலுவலகங்களுக்கு பொது விடுமுறை அளித்து அரசு அறிவித்துள்ளது. குறிப்பாக, தனியார் நிறுவன ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது. ஒருவேளை விதிகளை மீறி செயல்பட்டால் 1950 என்ற எண்ணில் புகாரளிக்கலாம்.


