News December 24, 2025
டிகிரி போதும்.. வங்கியில் ₹64,820 சம்பளம்!

பேங்க் ஆப் இந்தியாவில் காலியாக உள்ள 514 Credit Officers பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன ✦கல்வித்தகுதி: ஏதாவது ஒரு டிகிரி ✦வயது: 25- 40 ✦தேர்ச்சி முறை: Online Test, Personal Interview ✦20-ம் தேதி முதல் ஜனவரி 5-ம் தேதி வரை இதற்கு விண்ணப்பிக்கலாம் ✦ஆன்லைனில் விண்ணப்பிக்க <
Similar News
News January 2, 2026
சிக்னல் கவலை இனி இல்லை! BSNL-ன் புதிய சேவை!

BSNL வாடிக்கையாளர்கள் இனி எங்கேயாவது சிக்னல் கிடைக்கவில்லை என்று கவலைப்பட வேண்டாம். இதற்கான தீர்வாக ‘வைஃபை காலிங்’ (VoWiFi) வசதியை, இந்தியா முழுவதும் BSNL அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் மொபைலில் சிக்னல் குறைவாக இருந்தாலும், வீட்டிலோ அல்லது வெளியிலோ, எந்த நிறுவனத்தின் WiFi இணைப்பையும் பயன்படுத்தி போன் பேசலாம். போன் செட்டிங்ஸில் இந்த ஆப்ஷனை ஆன் செய்தாலே போதும், எந்த தடையுமின்றி பேசலாம்! SHARE
News January 2, 2026
BREAKING: பள்ளிகள் திறப்பு.. அரசு புதிய அறிவிப்பு

அரையாண்டு லீவுக்கு பிறகு வரும் 5-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், முன்னேற்பாடுகள் குறித்து பள்ளிக் கல்வித்துறை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. *பள்ளி வளாகம் முழுவதும் குப்பைகளின்றி தூய்மையாக வைத்திருக்க வேண்டும். *குடிநீர் தொட்டிகள், சத்துணவு கூடங்கள், பாத்திரங்கள் சுத்தமாக இருக்க வேண்டும். *இலவச நோட்டு, புத்தகங்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. SHARE IT.
News January 2, 2026
திராவிடம் தமிழனுக்கு எதிரானது அல்ல: திருமா

இந்த ஆண்டு நடக்கக்கூடிய தேர்தல், சமத்துவத்திற்கும் சனாதனத்திற்கும் இடையிலானது என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். திருச்சியில் வைகோ நடைபயண தொடக்க விழாவில் பேசிய அவர், சனாதனத்தை வீழ்த்த CM மு.க.ஸ்டாலின் தலைமையில் ஓரணியில் திரண்டுள்ளோம் எனத் தெரிவித்தார். மேலும், திராவிடம் என்பது தமிழனுக்கு எதிரானது இல்லை; அது தமிழ் மொழியை காக்கக் கூடியது என்றும் முழங்கியுள்ளார்.


