News December 24, 2025
அறிவித்தார் நாமக்கல் கலெக்டர்!

நாமக்கல் மாவட்டத்தில் கால்நடைகளுக்கான 8-வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசிப் பணி, வரும் 2025 டிசம்பர் 29 முதல் 21 நாட்களுக்கு நடைபெற உள்ளது. மொத்தம் 2,80,600 கால்நடைகளுக்குத் தடுப்பூசி போடும் வகையில் 105 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி விவசாயிகள் தங்கள் கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி கேட்டுக்கொண்டுள்ளார்.
Similar News
News December 26, 2025
நாமக்கல்: டிகிரி இருந்தால் போதும்.. மாதம் ரூ.13,000!

நாமக்கல் மக்களே, பொதுத்துறை வங்கியான பேங்க் ஆஃப் இந்தியா (BOI) தேசிய அளவிலான தொழிற்பயிற்சிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 400 இடங்களுக்கு ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.13,000 உதவித்தொகை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <
News December 26, 2025
நாமக்கல்: gpay, phonepay வைத்திருப்போர் கவனத்திற்கு!

டிஜிட்டல் யுகத்தில், UPI பரிவர்த்தனை பிரபலமாக உள்ளது. தவறுதலாகப் பணம் அனுப்பிவிட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE பண்ணுங்க!
News December 26, 2025
நாமக்கல் வாக்காளர்கள் கவனத்திற்கு!

நாமக்கல் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டுள்ள வாக்காளர்கள் மற்றும் வரும் 1-ந் தேதி 18 வயது பூர்த்தியடையும் புதிய வாக்காளர்களின் பெயர் சேர்த்தல், நீக்கம் (ம)முகவரி திருத்தம் தொடர்பான மனுக்களை பொதுமக்கள் வழங்கிடும் வகையில் நாளையும் (சனிக்கிழமை), நாளை மறுநாளும்(ஞாயிற்றுக்கிழமை) வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது


