News May 1, 2024
ரேஷன் அரிசி கடத்தல் புகார் எண் வெளியீடு
தமிழகத்தில் ரேஷன் அரிசி கடத்தப்படுபவர்கள் மீது பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் ரேஷன் அரிசி கடத்தல் மற்றும் பதுக்கல் தொடர்பாக பொதுமக்கள் 18005995950 என்ற தொலைபேசி எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவித்தவர் விவரங்கள் ரகசியம் காக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 20, 2024
மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனைகள் தேர்வு!
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் மாவட்டங்களுக்கு இடையிலான மகளிர் கிரிக்கெட் போட்டி 2025 ஜனவரி மாதம் நடைபெற உள்ளது. இதற்காக, தூத்துக்குடி மாவட்ட மகளிர் கிரிக்கெட் அணிக்கு வீரர்கள் தேர்வு வரும் 24ஆம் தேதி காலை தூத்துக்குடி எட்டையாபுரம் சாலையில் உள்ள சான் கிரிக்கெட் அகடாமியில் நடைபெற உள்ளதாக தூத்துக்குடி மாவட்ட கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.
News November 20, 2024
தூத்துக்குடி, திருச்செந்தூர் DSP-க்கள் மாற்றம்
திருச்சுழி DSP-ஆக இருந்த ஜெயநாதன் கோவில்பட்டி DSP-க்கு மாற்றப்பட்டுள்ளார். நெல்லை மாவட்டம் வள்ளியூர் DSP யோகேஷ் குமார் திருச்செந்தூர் DSP-ஆக நியமிக்கப்பட்டுள்ளார். திருச்செந்தூர் DSP வசந்த ராஜ் கொங்கு நகர காவல் உதவி ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். தூத்துக்குடி குற்ற ஆவண காப்பக DSP பொன்ராமு விருதுநகர் மாவட்டம் திருச்சுழிக்கு மாற்றப்பட்டுள்ளார். கோவில்பட்டி DSP வெங்கடேஷ் வள்ளியூருக்கு மாற்றம்.
News November 20, 2024
இலங்கைக்கு கடத்தவிருந்த பீடி இலைகள் பறிமுதல்!
தூத்துக்குடி கியூ பிராஞ்ச் போலீசார் இன்று(நவ.,20) அதிகாலை குலசேகரப்பட்டினம் வடக்கூர் கடற்கரையில் திடீர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த வேன் ஒன்றை மறித்து சோதனை செய்ததில், இலங்கைக்கு கடத்துவதற்காக 44 பண்டல்களில் 1500 கிலோ பீடி இலைகள் இருப்பது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் வேன் டிரைவரானை திருச்சியை சேர்ந்த பிரகாஷையும் கைது செய்தனர்.