News December 24, 2025
கர்ப்பிணிகள் தினமும் எவ்வளவு நடக்க வேண்டும் தெரியுமா?

கர்ப்ப காலத்தில் தினமும் வாக்கிங் செல்வது தாய் மற்றும் சேய்க்கு மிகவும் நன்மை பயக்கும். தினமும், 5,000-10,000 அடிகள் வரை நடக்க வேண்டும் என்று கூறும் டாக்டர்கள், ஒரே நேரத்தில் நடக்காமல் காலை, மதியம், இரவு என பிரித்து நடக்கலாம் என்கின்றனர். இதனால், *சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும் *குழந்தைக்கு தேவையான ஆக்சிஜன் கிடைக்கும் *சுகப்பிரசவ வாய்ப்புகள் அதிகமாகும் என்கின்றனர் டாக்டர்கள்.
Similar News
News December 28, 2025
திருச்சி: மாணவர்களுக்கு போதை பொருள் விற்பனை

திருச்சி செந்தண்ணீர்புரம் பகுதியில் மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்கப்படுவதாக பொன்மலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் நேற்று முன்தினம் அப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த நசுருதீன் (24), அசார் முகமது (26), ரவுடி உதுமான் அலி (23) ஆகியோரை பிடித்து சோதனை செய்ததில், அவர்களிடம் போதை மாத்திரைகள் இருந்துள்ளது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
News December 28, 2025
திமுகவை சீட் கேட்டு நெருக்கும் மற்றொரு கட்சி

TN-ல் முஸ்லிம்கள் 7% உள்ளதால், திமுக கூட்டணியில் முஸ்லிம்களுக்கு 16 தொகுதிகளை ஒதுக்கவேண்டும் என IUML பொதுச்செயலாளர் முகம்மது அபூபக்கர் தெரிவித்துள்ளார். குறிப்பாக IUML-க்கு 5 தொகுதிகளை கொடுக்க வேண்டும் என்ற அவர், கடையநல்லூர் தொகுதியை மீண்டும் கேட்டுப்பெற உள்ளதாகவும் பேசியுள்ளார். ஆனால் திமுகவோ முஸ்லிம் கட்சிகளுக்கு மொத்தமாகவே 4 சீட்கள்தான் ஒதுக்கவேண்டும் என்ற முடிவில் இருப்பதாக கூறப்படுகிறது.
News December 28, 2025
2025 REWIND: இந்தியர்களின் டாப் 5 பெஸ்ட் T20I இன்னிங்ஸ்!

2025 இந்தியாவிற்கு T20I-ல் சிறப்பான ஆண்டாக அமைந்துள்ளது. மொத்தமாக 21 போட்டிகளில் விளையாடி, அதில் 15 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றி நடைக்கு வழிவகுத்த இந்திய வீரர்களின் டாப் 5 இன்னிங்ஸை மேலே குறிப்பிட்டுள்ளோம். போட்டோவை வலது பக்கமாக Swipe செய்து யாரின் இன்னிங்ஸ் முதல் இடத்தில் உள்ளது என்பதை பாருங்க. இந்த லிஸ்ட்டில் வேறெந்த வீரரின் சிறப்பான இன்னிங்ஸை சேர்க்கலாம்?


