News December 24, 2025

கிறிஸ்துமஸ் பண்டிகை சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்

image

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சென்னை மெட்ரோ ரயில் நாளை ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணை பின்பற்றப்படும் என சென்னை மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. காலை 05:00 மணி முதல் இரவு 23:00 மணி வரை சேவை நடைபெறும். பீக் நேரங்களில் ஒவ்வொரு 7 நிமிடங்களுக்கு ரயில் இயக்கப்படும். நீட்டிக்கப்பட்ட பீக் அல்லாத நேரங்களில் 15 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News January 2, 2026

ஆசிரியர்கள் மீது தாக்குதல்: அன்புமணி கண்டனம்

image

பாமக தலைவர் அன்புமணி அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், “சமவேலைக்கு சம ஊதியம் கோரி சென்னையில் போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்கள் குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டுள்ளனர். இதேபோல், நேற்றைய (ஜன.01) போராட்டத்தின்போது ஆசிரியர்கள் சிலரை காவலர்கள் கொடூரமாக தாக்கியுள்ளனர். நீதி கேட்டு போராடும் ஆசிரியர்கள் மீது திமுக அரசு அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுவது கண்டிக்கத்தக்கது” என குறிப்பிட்டுள்ளார்.

News January 2, 2026

மத்திய கைலாஷ் மேம்பாலம் ஜன இறுதியில் திறப்பு!

image

சென்னையில் உள்ள மத்திய கைலாஷ் பகுதியில் மாநில நெடுஞ்சாலை துறை சார்பில் கட்டப்பட்டு வரும் மேம்பாலத்தின் திறப்பு விழா ஜன மாதம் இறுதியில் பொங்கல் பிறகு திறக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 650 மீட்டர் நீளத்தில் 60 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்படுகிறது. கடந்த 2022ஆம் ஆண்டு பணிகள் தொடங்கிய நிலையில் 2025 அக்டோபர் மாதம் முடிவடைந்து குறிபிடதக்கது.

News January 2, 2026

சென்னை: 10th போதும் வங்கியில் வேலை APPLY NOW

image

சென்னை மக்களே, பெடரல் பேங்க் வங்கிகளில் அலுவலக உதவியாளர்கள் (Office Assistant) பணிக்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக, ரூ.19,500 – ரூ.37,815 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள், வரும் ஜன.08ம் தேதிக்குள் <>இந்த லிங்கை<<>> கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். *தெரிந்தவர்களுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க*

error: Content is protected !!