News December 24, 2025
நெல்லையில் உச்சத்தை தொட்ட மல்லிகை விலை!

நாளை கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு நெல்லை பூக்கள் மொத்த விற்பனை சந்தையில் மல்லிகை, பிச்சிப்பூக்கு இன்று திடீர் கிராக்கி ஏற்பட்டது. இன்று காலை, முதல் ஏலத்தில் பிச்சிப்பூ ஒரு கிலோ 1200 ரூபாயிலிருந்து 2500 ரூபாயாகவும், மல்லிகை பூ 2000 ரூபாயில் இருந்து 3000 ரூபாயாகவும் உயர்ந்து விற்பனையானது. இதனால் மானூர் பகுதி பூ விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Similar News
News December 25, 2025
நெல்லை: புத்தாண்டு சிறப்பு ரயில்கள் விவரம்

தெற்கு ரயில்வேயின் புத்தாண்டு சிறப்பு ரயில்: ஈரோடு – நாகர்கோவில் (06025) டிச.30 மாலை 4 மணிக்கு புறப்பட்டு மறுதினம் 1.15 மணிக்கு சென்றடையும். மறுமார்க்கம் (06026) டிச.31 இரவு 11 மணிக்கு புறப்பட்டு மறுநாள் 8.30 மணிக்கு ஈரோடு வந்தடையும். சென்னை வழி நிறுத்தங்கள் உண்டு. (2 ஏசி, 9 சேர் கார், 5 பொது பெட்டிகள். சென்னை செல்லும் பயணிகள் அதிக முன்பதிவு) *ஷேர் பண்ணுங்க
News December 25, 2025
நெல்லை மாவட்ட கிறிஸ்தவர்கள் கவனத்திற்கு!

ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்ட தமிழ்நாட்டு கிறிஸ்தவர்கள் அரசு மானியம் பெற பிப்ரவரி 28-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். 01.11.2025-க்கு பிறகு பயணித்த 550 பேருக்கு தலா ரூ.37,000, 50 கன்னியாஸ்திரிகள்/அருட்சகோதரிகளுக்கு தலா ரூ.60,000 மானியம் ECS முறையில் வழங்கப்படும். விண்ணப்பப் படிவம் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் – சிறுபான்மையினர் நல அலுவலகங்களிலோ அல்லது www.bcmbcmw.tn.gov.in இணையதளத்தில் பெறலாம்.
News December 25, 2025
நெல்லை: இது தான் கடைசி; தவறவிடாதீர்கள் – கலெக்டர்

நெல்லை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஓட்டுச்சாவடிமையத்தில் உள்ள வாக்காளர் பட்டியலில் இதுவரை இடம் பெறாத இந்திய குடிமக்கள் மற்றும் 28 வயது நிரம்பிய இளம் வாக்காளர்கள் படிவம் 6ல் பூர்த்தி செய்து உறுதிமொழி படிவத்துடன் இணைத்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம். வரும் 27,28, ஜனவரி 3,4ம் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. இவ்வாறு கலெக்டர் சுகுமார் தெரிவித்தார்.


