News December 24, 2025

மருதமலையில் கருஞ்சிறுத்தை

image

கோவை மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை ஒட்டியுள்ள மருதமலை அடிவாரத்தில் உள்ள லெப்ரஸ் காலனியில் கருஞ்சிறுத்தை ஒன்று அங்குள்ள வீட்டில் புகுந்திருப்பதாக இன்று வனத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. விரைந்து சென்ற வனத்துறையினர் கருஞ்சிறுத்தை குட்டியை நீண்ட நேரமாக போராடி பத்திரமாக மீட்டனர். தொடர்ந்து அந்த கருஞ்சிறுத்தை குட்டியை அடர்ந்த வனப்பகுதிக்குள் விடும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

Similar News

News December 29, 2025

கோவை இயந்திரத்தில் தலைமுடி சிக்கி பெண் பலி!

image

கோவை பீளமேடு காந்தி மாநகர் பகுதியை சேர்ந்தவர் வின்சென்ட். இவரது மனைவி ஆனந்த ஜோதி. இவர் பீளமேடு பகுதியில் உள்ள மரம் அறுக்கும் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 26 ஆம் தேதி பணியில் இருந்த போது இயந்திரத்தில் தலைமுடி சிக்கியதில் ஆனந்த ஜோதி படுகாயமடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் நேற்று சிகிச்சை பலனின்றி பலியானார். இதுகுறித்து பீளமேடு போலீசார் விசாரிக்கின்றனர்.

News December 29, 2025

கோவை: இலவச கேஸ் சிலிண்டர் விண்ணப்பிப்பது எப்படி?

image

1.இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு பெற <>இங்கே <<>>கிளிக் செய்து தங்களுக்கு விருப்பமான கேஸ் நிறுவனத்தைத் (Indane/Bharat/HP) தேர்வு செய்யவும்

2.பெயர்,மொபைல் எண் விவரங்களை உள்ளிட்டு ‘Register ‘ செய்ய வேண்டும்

3.ஆன்லைன் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்த விண்ணபத்தை அருகில் உள்ள எரிவாயு விநியோகஸ்தரிடம் ஒப்படைக்க வேண்டும்

4.மேலும் விவரங்களுக்கு 1800-233-3555,1800-266-6696 அழைக்கவும்.ஷேர் பண்ணுங்க

News December 29, 2025

முதல்வரின் கோவை பயணம் விவரம் வெளியீடு!

image

தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று காலை 10.05 மணியளவில் சென்னையிலிருந்து விமானம் மூலமாக கோவை வருகிறார். 11.15 மணியளவில் கோவை விமான நிலையம் வந்து அங்கிருந்து தனியார் ஹோட்டலுக்கு செல்கிறார். பின்னர், அங்கிருந்து 4.30 மணியளவில் புறப்பட்டு திருப்பூர் மாவட்டம் பல்லடம் மகளிரணி மாநாட்டிற்கு சென்று விட்டு பின்னர் மீண்டும் இரவு 8.30 மணியளவில் கோவை விமான நிலையம் வந்து அங்கிருந்து சென்னை செல்கிறார்.

error: Content is protected !!