News December 24, 2025
கடலூர்: SIR பட்டியலில் பெயர் சேர்க்க கடைசி வாய்ப்பு!

கடலூர் மாவட்டத்தில் SIR-க்கு பிறகு, 2,46,818 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், புதிய வாக்காளர்கள் பெயர் சேர்ப்பு, நீக்கம், முகவரி மாற்றம் போன்ற திருத்தங்களை மேற்கொள்ள வரும் டிச.27, 28 மற்றும் ஜன.3, 4 ஆகிய தேதிகளில், கடலூர் மாவட்டத்தின் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. உங்கள் அருகில் உள்ள வாக்கு சாவடி மையங்களை தெரிந்து கொள்ள<
Similar News
News December 27, 2025
கடலூர்: பெண் குழந்தை உள்ளதா? உடனே விண்ணப்பிக்கவும்!

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ், பெண் குழந்தைககள் கல்வி பயிலும் காலத்தில் நிதியுதவி வழங்கப்படுகிறது. குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-ம், 2 அல்லது 3 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். தகுதி, தேவையான ஆவணங்ககள் உள்ளிட்ட விவரங்களை அறிய கடலூர் மாவட்ட சமூக நல அலுவலரை அணுகலாம். ஷேர் பண்ணுங்க
News December 27, 2025
கடலூர்: 15 வயது சிறுமி கர்ப்பம்; பாய்ந்த போக்சோ!

கடலூர் கம்மியம்பேட்டையை சேர்ந்தவர் கவுசிக் (19). இவர் 15 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி, பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்நிலையில் சோர்வாக காணப்பட்ட சிறுமியை அவரது பெற்றோர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அப்போது சிறுமி 5 மாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கடலூர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, கௌசிக்கை தேடி வருகின்றனர்.
News December 27, 2025
கடலூர்: ரோந்து செல்லும் காவலர்கள் விபரம்!

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று(டிச.25) இரவு 10 மணி முதல் இன்று(டிச.26) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட, சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.


