News December 24, 2025
54 பந்துகளில் 150 ரன்கள்.. சூர்யவன்ஷி உலக சாதனை

VHT-ல் வைபவ் சூர்யவன்ஷி 36 பந்துகளில் சதம் விளாசி மிரட்டியுள்ளார். APR-க்கு எதிரான போட்டியில் 84 பந்துகளை எதிர்கொண்டு, 16 பவுண்டரிகள், 15 சிக்ஸர்கள் பறக்கவிட்டு 190 ரன்கள் குவித்துள்ளார். 12-வது ஓவரில் தனது சதத்தை பூர்த்தி செய்த அவர் ‘Fastest 150’ ரெக்கார்ட்டையும் படைத்துள்ளார். அச்சாதனையை டி வில்லியர்ஸ் 64 பந்துகளில் படைத்த நிலையில், தற்போது அதை 54 பந்துகளில் அடித்து வைபவ் முறியடித்துள்ளார்.
Similar News
News January 8, 2026
BREAKING: கரூர் எம்.பி கடும் கண்டனம்

விஜய் நடித்து வெளியாக இருந்த “ஜனநாயகன்” திரைப்படத்திற்கு தணிக்கை வாரியம் சான்றிதழ் வழங்க மறுப்பது கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரானது என்றும், இது தமிழ் திரையுலகத்தின் மீது நடத்தப்படும் தாக்குதல் என்றும் எம்.பி ஜோதிமணி கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் தணிக்கை வாரியம் காலாவதியான அமைப்பாக மாறி, அரசியல் ஆயுதமாக பயன்படுத்தப்படுவதாக குற்றம்சாட்டி, அதனை கலைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
News January 8, 2026
நெஸ்லே பால் பவுடரில் நச்சுப்பொருள்: விளக்கம்

இந்தியாவில் விற்கப்படும் தனது பால் பவுடரில் நச்சு இல்லை. அவை பாதுகாப்பானவையே என நெஸ்ட்லே தெரிவித்துள்ளது. வாந்தி ஏற்படுத்தும் நச்சு பொருளான Cereulide கலந்திருக்கலாம் எனக்கூறி உலகின் பல நாடுகளில் தனது தயாரிப்பிலான பால் பவுடர்களை நெஸ்ட்லே திரும்ப பெற்றது. எனினும், இந்தியாவில் விற்கப்படும் அனைத்தும் உள்ளூரில் தயார் செய்வதால், அவற்றில் நச்சுப்பொருள் எதுவும் இல்லை என நெஸ்ட்லே உறுதி அளித்துள்ளது.
News January 8, 2026
505-ல் 404 வாக்குறுதிகளை முடிச்சிட்டோம்: RS பாரதி

திமுகவின் 5 ஆண்டுகால ஆட்சியில் 505 தேர்தல் வாக்குறுதிகளில் 404-ஐ நிறைவேற்றிவிட்டோம் என RS பாரதி தெரிவித்துள்ளார். சென்னையில் பேசிய அவர், அரசு ஊழியர்கள் பிரச்னையை தீர்த்துவிட்டோம். பொங்கல் பரிசு கொடுத்து விட்டோம். இதை எதிர்க்கட்சிகளால் தாங்க முடியவில்லை என்றார். மேலும், ஊழல் புகார் கொண்ட உலக மகா அயோக்கியர்களான அதிமுக Ex அமைச்சர்கள் தான் ஆளுநரிடம் மனு அளித்துள்ளனர் என்றும் விமர்சித்துள்ளார்.


