News December 24, 2025

சென்னை: குடிநீர் பிரச்னையா? இந்த நம்பரை அழையுங்கள்

image

சென்னை குடிநீர் பிரச்சனை புகார்களுக்கு, 044 – 4567 4567 அல்லது 1916 என்ற கட்டணமில்லா எண்ணுக்கு போன் செய்யலாம். மேலும், மாநகராட்சியால் வழங்கப்பட்ட ‘நம்ம சென்னை செயலி’ மூலம் புகார் அளிக்கலாம். அல்லது, மாநகராட்சி மூலம் கொடுக்கப்பட்ட வாட்ஸ்-அப் 94999 33644 எண்ணுக்கு உங்கள் புகார்களை தெரிவிக்கலாம். குடிநீர் வடிகால் வாரியம் 24 மணிநேரமும் இயங்க கூடிய கட்டுப்பாட்டு அறையை கொண்டுள்ளது. ஷேர் பண்ணுங்க

Similar News

News January 7, 2026

சென்னையில் தறிகெட்டு ஓடிய கார்; அடுத்தடுத்து மோதி விபத்து

image

சென்னை, கே.கே.நகர் பகுதியில் சொகுசு கார் ஒன்று வேகமாக வந்துள்ளது. சாலையில் தாறுமாறாக தறிகெட்டு ஓடிய அந்த கார் சாலையில் 2 ஆட்டோக்கள், 2 லோடு ஆட்டோக்கள் மீது மோதி விபத்து ஏற்பட்டது. மேலும் இந்த விப்பத்தில் குழந்தை உட்பட 5 பேர் காயமடைந்தனர். பின்னர் பொதுமக்கள் காரை மடக்கிபிடித்தனர். அப்போது ஓட்டுநர் மதுபோதையில் இருந்தது தெரியவந்தது. தகவலறிந்து வந்த போலீசார் ஓட்டுநரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

News January 7, 2026

சென்னையில் துடிதுடித்து பலி

image

காஞ்சிபுரம் முடிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் அப்துல் ரகுமான் (20). பிளம்பிங் வேலைக்காக வேளச்சேரிக்கு தனது இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். அப்போது தனியார் மருத்துவமனையின் வேன் டிரைவர் திடீரென வேனின் கதவை திறந்ததால் அப்துல் ரகுமான் நிலைத்தடுமாறி கீழே விழுந்தார். இந்நிலையில், பின்னால் வந்த பின்னால் வந்த தனியார் பள்ளி வாகனம் அப்துல் ரகுமானின் தலையில் ஏறியதால் அவர் துடிதுடித்து உயிரிழந்தார்.

News January 7, 2026

சென்னை: பொங்கல் முன்னிட்டு போக்குவரத்து மாற்றம்!

image

பொங்கலுக்காக தென் மாவட்டங்களைச் சேர்ந்தோர் ஜன-9 முதல் 15 வரை ஊருக்கு செல்லும் போது போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க, OMR, திருப்போரூர், கேளம்பாக்கம், செங்கல்பட்டு வழி, அல்லது வண்டலூர் வெளிச்சுற்று சாலையை தேர்வு செய்யலாம் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். மேலும் ஜி.எஸ்.டி சாலை, சென்னை மீனம்பாக்கம், கிண்டி வழியாக செல்ல வேண்டாம் கடுமையான போக்குவரத்து ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!