News December 24, 2025
விருதுநகர்: தம்பியை பீர் பாட்டிலால் தாக்கிய அண்ணன்

சிவகாசி அருகே ரிசர்வ்லைன் நேருஜிநகரை சேர்ந்தவர் பாலன் மகன் நாகராஜ் (25) இவருக்கும் இவரது அண்ணன் பாலமுருகன் (27) என்பவருக்கும் குடும்பத்தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் நாகராஜனிடம் தகராறு செய்த பாலமுருகன் அவரை காலி பீர் பாட்டிலால் தலையில் தாக்கியுள்ளார். இதில் நாகராஜனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. பாலமுருகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News January 15, 2026
விருதுநகர்: ரேஷன் ஊழியர்கள் மீது புகார் செய்வது எப்படி?

விருதுநகர் மாவட்ட ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, தேவையான பொருட்களுக்கு பதிலாக மற்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) சென்னை மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். உங்க நண்பர்களுக்கு SHARE செய்து எல்லோருக்கும் தெரியப்படுத்துங்க
News January 15, 2026
விருதுநகர் மக்களே.. இனி ஆன்லைனில் பட்டா!

பட்டா, சிட்டா ஆன்லைனில் பெற அரசின் <
News January 15, 2026
அருப்புக்கோட்டை: வைரலான வீடியோவால் போலீசார் அதிரடி

அருப்புக்கோட்டை ஸ்ரீசௌடாம்பிகா பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் நேற்று பொங்கல் கொண்டாட்டத்தை முடித்து கல்லூரி முன்பு இருசக்கர வாகனங்களில் அதிவேகமாக சென்று பொது மக்களை அச்சுறுத்தினர். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் இன்று டவுன் போலீசார் அந்த மாணவர்களை அழைத்து தக்க அறிவுரை வழங்கி இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து தலா ரூ.11,000 அபராதம் விதித்தனர்.


