News December 24, 2025
நெல்லை: பணப் பறிப்பில் ஈடுபட்டவர் குண்டாஸில் கைது

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த அன்பழகன் என்பவர் மகாராஜன் என்பவரை பாளை இரயில் நிலையத்தில் மிரட்டி, பணம் பறித்துள்ளார். இந்த வழக்கில் சம்பந்தப்பட்டு பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்ததாக கூறி அன்பழகன் நேற்று போலீஸ் கமிஷனர் சந்தோஸ் ஹாதிமணி உத்தரவில் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
Similar News
News January 10, 2026
நெல்லை: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு தெரியுமா?

திருநெல்வேலி மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் பட்டா யார் பெயரில் இருக்கிறது என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். இதற்கு <
News January 10, 2026
நெல்லை: மாணவி கழுத்தை நெரித்து கொலை

நெல்லை வீரவநல்லூர் பகுதியை சேர்ந்தவர் வரதராஜன் (52). இவரது மகள் வர்ஷினி (22) சேலம் தனியார் சித்த மருத்துவ கல்லூரியில் பயின்று வந்தார். இவர் கடந்த ஜன.7ம் தேதி தான், தங்கியிருந்த வீட்டில் கழுத்து நெரித்து கொலை செய்ப்பட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொள்கையில் வர்ஷினியின் தந்தை தலைமறைவானது தெரிந்தது. இதனால், அவரை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
News January 10, 2026
நெல்லை: 3 மணி நேரத்தில் மாணவனை மீட்ட போலீஸ்

V.K.புரத்தைச் சேர்ந்த சலீம் என்ற மாணவன் அங்குள்ள தனியார் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறான். நேற்று பள்ளி முடிந்து மாலை வீட்டிற்கு திரும்பவில்லை. இதுகுறித்து மாணவனின் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். புகாரின் பேரில் போலீசார் காணாமல் போன மாணவனை இரவு 9 மணிக்குள் மீட்டு பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர். காணாமல் போன 3 மணி நேரத்தில் மாணவனை மீட்ட காவல்துறைக்கு பாராட்டு தெரிவிக்கபட்டது.


