News December 24, 2025
MGR நினைவிடத்தில் EPS எடுத்த சபதம்

MGR-ன் 38-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, அவரது நினைவிடத்தில் EPS தலைமையில் அதிமுகவினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, அதிமுக ஆட்சி மீண்டும் மலர உழைப்போம் என அனைவரும் சபதம் எடுத்துக்கொண்டனர். ஒரு இயக்கத்தை மட்டுமல்ல, ஒரு தலைமுறையின் கனவுகளை உருவாக்கி சென்றவர் MGR என புகழ்ந்த EPS, தமிழக மக்களின் வளர்ச்சிக்காக பாடுபட்ட MGR-ன் வழியை பின்பற்றுவோம் என்று உறுதியேற்றார்.
Similar News
News December 30, 2025
சின்ன காய் தான்… ஆனால் நன்மைகள் பெரிது!

வீட்டு தோட்டங்களில் எளிதாக கிடைக்கும் ஒரு காய் சுண்டைக்காய். சிறிதாக இருந்தாலும், அதன் ஆரோக்கிய நன்மைகள் மிகப்பெரிது என்கின்றனர் டாக்டர்கள். வாரம் 2 முறை இதை சாப்பிட்டால், *ரத்தம் சுத்தமடையும் *வயிற்றுக் கிருமிகள் அழியும் *வயிற்றுப் புண்களை ஆற்றும் *மலச்சிக்கலை நீக்கும், அஜீரண கோளாறுகள் குணமாகும் *சுவாச நோய்களுக்கு நல்லது *சர்க்கரை நோயால் உண்டாகும் கை, கால் நடுக்கம், உடல் சோர்வு குறையும்.
News December 30, 2025
தேதி குறிச்சாச்சு.. ரஷ்மிகாவுக்கு டும் டும் டும்!

நடிகை ரஷ்மிகா மந்தனா- நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கு ஏற்கெனவே நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது. அது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் ஏதும் வெளிவராத சூழலில், தற்போது அவர்களின் திருமணத் தேதி குறித்த தகவல் ஒன்றும் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 2026 பிப்ரவரி மாதம் 26-ம் தேதி இருவரும் ராஜஸ்தானில் உதய்பூரில் உள்ள அரண்மனை ஒன்றில் திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
News December 30, 2025
விஜய்யிடம் சிபிஐ விசாரணையா?

கரூர் விவகாரம் தொடர்பாக புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, CTR நிர்மல் குமார் உள்ளிட்டோர் டெல்லி CBI அலுவலகத்தில் நேற்று ஆஜராகினர். அவர்களிடம் சுமார் 9 மணிநேரம் விசாரணை நடைபெற்றது. இதனையடுத்து விஜய் விசாரணைக்கு அழைக்கப்படுவாரா என்ற கேள்விக்கு, தற்போதைக்கு குறிப்பிட்ட நிர்வாகிகளுக்கு விடுத்த அழைப்பின் பேரில் விசாரணைக்கு ஆஜரானோம் என்று நிர்மல் குமார் பதிலளித்துள்ளார்.


