News December 24, 2025
புதுக்கோட்டை: முதியவர் மீது மோதி பைக்

கந்தர்வக்கோட்டை அடுத்த அரியாண்டிபட்டியிலிருந்து கந்தர்வக்கோட்டைக்கு பழனிச்சாமி (67) என்பவர் நேற்று சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது அரியாண்டி சாலையில் அவருக்கு பின்னால் பைக்கை ஓட்டி வந்த ஹரிஹரசுதன் (18) மோதியதில் பழனிச்சாமிக்கு பலத்த காயம் ஏற்பட்டு மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News December 25, 2025
புதுக்கோட்டை: 12th போதும்.. அரசு வேலை ரெடி!

தமிழ்நாடு அரசின் பொது சுகாதாரத்துறையில் உள்ள கள உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: தமிழ்நாடு அரசு வேலை
2. பணியிடங்கள்: 41
3. வயது: 18 – 48
4. சம்பளம்: ரூ18,200 – ரூ.67,100
5. கல்வித்தகுதி: 12th & MLT (Medical Laboratory Technology)
6. கடைசி தேதி: 29.12.2025
7. விண்ணப்பிக்க:<
இந்த தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற SHARE பண்ணுங்க!
News December 25, 2025
புதுகை: 31 பேர் பிணையில் விடுவிப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று சூதாட்டம் விளையாடிய கரம்பக்குடியை சேர்ந்த 6 பேரும் மாத்தூரை சேர்ந்த 19 பேரும் நேற்று பணம் வைத்து சூதாட்டம் விளையாடிக் கொண்டிருந்தனர். இதனை அடுத்து அந்த வழியே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த புதுக்கோட்டை காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர்.மேலும் அவர்களிடமிருந்து சீட்டுகளையும், ரொக்க பணத்தையும் பறிமுதல் செய்து பிணையில் விடுவித்தனர்.
News December 25, 2025
புதுகை: தொழில் தொடங்க ரூ.25 லட்சம் உதவி!

பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (TABCEDCO) மூலம், பி.சி, எம்.பி.சி, மற்றும் சீர்மரபினர் பிரிவினருக்கு தொழில் தொடங்க ரூ.25 லட்சம் வரை கடன் உதவி வழங்கப்படுகிறது. சிறுதொழில் தொடங்க நினைப்போர், இந்த கடனுதவியை பெற<


