News December 24, 2025
பந்தலூர் அருகே நூதன போராட்டத்தால் பரபரப்பு!

நீலகிரி மாவட்டம், நெல்லியாளம் நகராட்சியில், நகராட்சி மூலம், 51 பணிகள் ஒதுக்கப்பட்டு டெண்டர் விடப்பட்டது. இந்த பணிகளை டெண்டர் எடுத்த ஒப்பந்ததாரர்கள், மார்ச் மாதம் பணிகளை நிறைவு செய்தனர். ஆனால் பணிகள் முடிந்தும் இன்னும் பணம் தரவில்லை என கூறப்படுகிறது. இதனால் நகராட்சி அலுவலக வளாகத்தில், நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, வாயில் கருப்பு துணி கட்டி ஒப்பந்ததாரர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Similar News
News December 25, 2025
FLASH: நீலகிரியில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்

நீலகிரி மாவட்டத்தில் இன்று முதல் ஜனவரி 5 தேதி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி உதகையில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் அனைத்து சுற்றுலா வாகனங்களும் கோத்தகிரி வழியாக செல்ல வேண்டும். அத்தியாவசிய பொருள்கள் ஏற்றி வரும் வாகனங்களை தவிர, அனைத்து கனரக வாகனங்களும், காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை உதகை நகரத்திற்குள் அனுமதி இல்லை. இந்த தகவலை நீலகிரி மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.
News December 25, 2025
நீலகிரி: நிலம் வாங்க மானியம்: விண்ணபிப்பது எப்படி?

1).நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டத்தில் நிலம் வாங்க ரூ.5 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது
2).குடும்ப ஆண்டு வருமானம் 3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்
3).2.5 ஏக்கர் நஞ்சை நிலம் அல்லது 5 ஏக்கர் புஞ்சை நிலம் வாங்கலாம்
4).100 சதவித முத்திரைத்தாள்,பதிவுக்கட்டணம் இலவசம்
5).<
6).மேலும் விவரங்களுக்கு உங்கள் மாவட்ட தாட்கோ மேலாளரை அணுகலாம்.SHAREit
News December 25, 2025
சேரங்கோடு பகுதியில் பள்ளத்தில் கவிழ்ந்த மகிழுந்து

சேரங்கோடு மண்டசாமி கோவில் அருகே தேவாலாவில் இருந்து கேரளா நோக்கி சென்ற KL550216 பதிவென் கொண்ட கார், கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், கணவன் மனைவி 2 குழந்தைகள் உட்பட 4 பேரும் பலத்த காயத்துடன், கேரளா மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். விபத்து குறித்து சேரம்படி காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.


