News December 24, 2025
வாக்காளர் அடையாள அட்டை திருத்தமா?

சேலத்தில் உள்ள 1,346 வாக்குச்சாவடி மையங்களிலும், வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்கள் வரும் டிசம்.27, 28 மற்றும் ஜன. 3, 4 ஆகிய தேதிகளில் நடைபெறும் என ஆட்சியர் பிருந்தா தேவி தெரிவித்துள்ளார். இதில் புதிய வாக்களர் அடையாள அட்டை, பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தங்களை மேற்கொள்ளலாம்.மேலும் voters.eci.gov.in என்ற இணையதளம்Voter Helpline App மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.SHAREit
Similar News
News December 27, 2025
விபத்து: வாழப்பாடி முன்னாள் தலைவர் பலி!

வாழப்பாடி புதுப்பாளையம் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் ராஜா (53). கடந்த 11-ம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்து காயமடைந்தார். சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். இது குறித்து வாழப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
News December 27, 2025
சேலம்: ஆடு, கோழி பண்ணை அமைக்க ரூ.20 லட்சம் மானியம்!

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் nlm.udyamimitra.in என்ற இணையதளம் வாயிலாக தகுதிகளை கண்டறிந்து விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க.
News December 27, 2025
சேலம்: ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு!

சேலம் மக்களே ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால் ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க.


