News December 24, 2025
பறவை காய்ச்சல்: எல்லைகளில் உஷார் நிலை!

கேரளாவின் ஆலப்புழா, கோட்டயம் மாவட்டங்களில் பறவை காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இது வேகமாக பரவி வருவதால், பாதிப்புள்ள பகுதிகளில் கோழி, முட்டை, காடை, வாத்து ஆகியவற்றை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழக-கேரள எல்லைகளில் கோழிகள், இறைச்சிகளை ஏற்றி வரும் வாகனங்கள் கண்காணிக்கப்பட்டு வருவதோடு, தமிழக கோழிப் பண்ணைகளிலும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
Similar News
News December 29, 2025
அதிக கடனில் தமிழகம்.. புயலை கிளப்பிய காங். நிர்வாகி

இந்தியாவிலேயே TN தான் அதிக நிலுவைக்கடன் வைத்துள்ளது என காங்., நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி கூறியுள்ளார். கடனில் இருந்த TN-ஐ வளர்ச்சியடைந்த மாநிலமாக திமுக மாற்றியதாக கனிமொழி கூறியிருந்தார். அதை X-ல் சுட்டிக்காட்டி, 2010-ல் உபி., தமிழகத்தை விட இருமடங்கு கடன் வைத்திருந்ததாகவும், ஆனால் தற்போது உபி.,-ஐ விட TN அதிக கடனில் உள்ளதாக தெரிவித்துள்ளார். இது மிகவும் கவலைக்குரிய விஷயம் என குறிப்பிட்டுள்ளார்.
News December 29, 2025
பும்ரா, பாண்ட்யாவுக்கு ரெஸ்ட்? பிசிசிஐ முடிவு

நியூசிலாந்து ODI தொடருக்கான இந்திய அணி ஜன.3 அல்லது 4-ம் தேதி அறிவிக்கப்படவுள்ளது. இந்நிலையில் ODI தொடரில் பும்ரா, ஹர்திக் பாண்ட்யாவுக்கு ரெஸ்ட் கொடுக்க BCCI திட்டமிட்டுள்ளது. பிப்ரவரியில் டி20 WC தொடங்கும் நிலையில், பணிச்சுமை கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எனினும் இருவரும் NZ எதிரான டி-20 தொடரில் விளையாடவுள்ளனர். மேலும், பாண்ட்யா VHT தொடரின் சில போட்டிகளில் களமிறங்குவார் என கூறப்படுகிறது.
News December 29, 2025
புத்தாண்டில் வரிசை கட்டும் கார்கள் இவைதான்!

புத்தாண்டை முன்னிட்டு, 2026 ஜனவரியில் முன்னணி கார் நிறுவனங்கள் தங்களது புது மாடல்கள் மற்றும் அப்டேட்டட் வேரியண்ட்களை இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளன. அடுத்த தலைமுறை பெட்ரோல் SUV-கள் முதல் எலக்ட்ரிக் கார்கள் வரை, பல மாடல்கள் விற்பனைக்கு வரிசை கட்டியுள்ளன. அந்த கார் மாடல்களின் போட்டோக்களை மேலே தொகுத்துள்ளோம். அதை Swipe செய்து பாருங்க.


