News December 24, 2025

போதையில் வீட்டுப் படியில் தடுமாறி விழுந்த எலக்ட்ரீசியன் பலி

image

திருமங்கலம் பகுதியை சேர்ந்தவர் முனியாண்டி மகன் பாண்டியராஜ்(32). எலக்ட்ரீசியனான இவர் மது போதைக்கு அடிமையானவர். இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளது. நேற்று முன்தினம் முழு போதையில் வீட்டிற்கு வந்தவர் வீட்டுப் படி ஏறிய போது தடுமாறி கீழே விழுந்ததில், தலையில் அடிபட்டது. மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட அவர் அங்கு பலியானார். போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News

News January 2, 2026

மதுரை: கால்வாயில் குளித்தவர் பரிதாப பலி

image

திண்டுக்கல் நத்தம் பகுதியை சேர்ந்தவர் வெங்கட்ராமன்(57). திருமணம் ஆகாதவர். நேற்று அப்பன் திருப்பதி அருகே கள்ளந்திரி பெரியாற்று கால்வாயில் குளித்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி கால்வாயில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தார். இவரது சகோதரி கீதா அளித்த புகாரின் பேரில் அப்பன் திருப்பதி போலீசார் விசாரிக்கின்றனர்.

News January 2, 2026

மதுரை மக்களே அரசு பஸ்ஸில் பிரச்னையா.!

image

மதுரை மாவட்டத்தில் உங்கள் பகுதியில் இயக்கப்படும் அரசு பேருந்துகள் குறித்து புகார்/ குறைகளை அரசு போக்குவரத்து கழகத்தில் புகார் தெரிவிக்கலாம். காலதாமதமாக வருவது, நிற்காமல் செல்வது, ஓட்டுநர், நடத்துநர் பயணிகளிடம் நடத்தை விதிகளை மீறி செயல்படுவது, நேரத்திற்கு வராமல் இருப்பது உள்ளிட்டவை குறித்து 94875 99020 இந்த எண்ணல் புகார் தெரிவிக்கலாம். அனைவருக்கும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க

News January 2, 2026

மதுரை: பாத்ரூமில் வழுக்கி விழுந்தவர் பரிதாப பலி

image

அலங்காநல்லூர் அருகே கோவில் பாப்பாக்குடியைச் சேர்ந்தவர் சண்முகவேல் மகன் பாலமுருகன்(31). மது போதைக்கு அடிமையான இவர் எப்போதும் மது மயக்கத்திலேயே இருந்து வந்தார். நேற்று முன்தினம் இவரது வீட்டு பாத்ரூமிற்கு சென்றவர் அங்கு தடுமாறி கீழே விழுந்து மயங்கி கிடந்தார். மதுரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், அங்கு சிகிச்சை பலனின்றி இறந்து போனார். அலங்காநல்லூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!