News December 24, 2025

மதுரை: கணவர் கண்முன்னே மனைவி பலியான சோகம்

image

கள்­ளிக்­குடி செங்­கப்­படையை சேர்ந்­த­வர் மூர்த்தி(56). இவர் தன் மனைவி சரஸ்­வ­தியு­டன் பைக்கில் நேற்று சென்று கொண்­டிருந்­தார். ரெங்­கப்பநாயக்­கர் ஊரணி அருகே சென்ற போது பைக்கில் இருந்து மனைவி கீழே விழுந்­தார். தலை­யில் பலமாக அடி­பட்­ட நிலையில் அரசு மருத்துவம­னைக்கு சிகிச்­சைக்­காக கொண்டு செல்லும் வழியி­லேயே சரஸ்­வதி உயிரிழந்­தார். விபத்து குறித்து திருமங்­க­லம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News

News January 2, 2026

மதுரை: ஓடும் ஆட்டோவில் உயிரிழந்த ஆட்டோ டிரைவர்

image

மதுரை ராஜாக்கூர் அப்பார்ட்மெண்ட்டை சேர்ந்தவர் செல்லத்துரை மகன் ராஜ்குமார் (48). ஆட்டோ டிரைவரான இவர் நேற்று கருப்பாயூரணி பெட்ரோல் பங்க் அருகே ஆட்டோவில் சென்று கொண்டிருந்த போது திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு ஆட்டோவில் சுருண்டு விழுந்து பலியானார். அவர் மனைவி ஜெயபிரபா அளித்த புகாரின் பேரில் கருப்பாயூரணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

News January 2, 2026

மதுரை: 12th தகுதி… ரயில்வே வேலை ரெடி

image

தூத்துக்குடி மக்களே, இந்தியன் ரயில்வேயில் பல்வேறு பணிகளுக்கு 312 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 18 வயது நிரம்பிய 12வது படித்தவர்கள் இங்கு <>கிளிக் <<>>செய்து ஜன.29க்குள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.35,400 வரை வழங்கப்படும். எழுத்து தேர்வு மூலம் ஆட்கள் பணியமர்த்தப்படுவர். இந்த நல்ல தகவலை வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க.

News January 2, 2026

மதுரயில் சோகம்… ஒன்றரை மாத குழந்தை திடீர் உயிரிழப்பு

image

மதுரை அண்ணாநகரை சேர்ந்த சக்திமுனி(30), தனியார் வங்கியில் மேலாளராக உள்ளார். இவருக்கு பெண் குழந்தை ஒன்று பிறந்து 50 நாட்கள் ஆகிறது. தாய்ப்பால் கொடுத்து தாய் குழந்தையை தூங்க வைத்த பின்னர், பார்த்த போது குழந்தை அசைவின்றி இருந்தது. அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். அண்ணாநகர் போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!