News December 24, 2025
அரவக்குறிச்சியில் வசமாக சிக்கிய இருவர்!

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுகா புங்கம்பாடி பிரிவு அருகே தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்துள்ளனர். தகவல் அறிந்து அங்கு சென்ற அரவக்குறிச்சி போலீசார் லாட்டரி விற்ற அதே பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் (50) மற்றும் பாண்டியன் (52) ஆகிய இரண்டு பேர் மீது வழக்கு பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த அனைத்து லாட்டரி சீட்டுகளும் பறிமுதல் செய்தனர்.
Similar News
News January 21, 2026
குளித்தலை முன்னாள் எம்எல்ஏ காலமானார்!

குளித்தலை முன்னாள் எம்எல்ஏவும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான வெள்ளியணை ராமநாதன், வயது மூப்பின் காரணமாக இன்று காலமானார். இவர் 1962 ஆம் ஆண்டு தமது 26 வயதில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் நின்றபோது அதிக வாக்கு வித்தியாசத்தில் குளித்தலை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1957-ல் கருணாநிதி முதன்முதலாக குளித்தலை சட்டமன்ற வேட்பாளராக நின்ற போது வெள்ளியணை பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.
News January 21, 2026
கரூா் -சேலம் வழித்தட ரயில்களின் சேவையில் மாற்றம்

பொறியியல் பணிகள் காரணமாக, கரூா் – திருச்சி பயணிகள் ரயில் (76810), மறுமாா்க்கமாக திருச்சி – கரூா் பயணிகள் ரயில் (76809), திருச்சி – ஈரோடு பயணிகள் ரயில் (56105), மயிலாடுதுறை – சேலம் விரைவு ரயில் (16811), மறுமாா்க்கமாக சேலம் – மயிலாடுதுறை விரைவு ரயில் (16812), ஈரோடு – திருச்சி பயணிகள் ரயில் (56810) ஆகிய ரயில்கள் வரும் 27 ஆம் தேதி முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன என அறிவிக்கப்பட்டுள்ளது.
News January 21, 2026
JUST IN: கரூர் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

கரூர் மாவட்டத்தில் உள்ள 157 கிராம ஊராட்சிகளிலும், வருகிற 26.01.2026 குடியரசு தினத்தன்று கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் தங்கவேல் அறிவித்துள்ளார். இக்கூட்டங்களில் ஊராட்சி நிர்வாகம், பொதுநிதி செலவினம், தணிக்கை அறிக்கை மற்றும் கொசு மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.


