News December 24, 2025
சேலத்தில் விமான கட்டணம் பலமடங்கு உயர்வு!

சேலம் விமான நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களூரு மற்றும் கொச்சிக்கு விமான கட்டணங்கள் பலமடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. சாதாரண நாட்களில் சேலம்-சென்னைக்கு ரூ. 1,700 வசூலிக்கப்படும் நிலையில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு இன்று (புதன்கிழமை) ரூ. 3,921 ஆகவும், நாளை (வியாழக்கிழமை) ரூ. 3,708 ஆகவும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பெங்களூரு மற்றும் கொச்சிக்குமான கட்டணங்களும் கணிசமாக உயர்வு
Similar News
News January 15, 2026
சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (ஜன.15) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.
News January 15, 2026
சேலம் அருகே விபத்தில் பலி!

சேலம் தொட்டம்பட்டியை சேர்ந்த கல்லுடைக்கும் தொழிலாளி கோவிந்தன் (66), தாரமங்கலம் சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பினார். அப்போது பேருந்து நிலையம் அருகே எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சோக சம்பவம் குறித்து தாரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News January 15, 2026
சேலம்: அரசு சேவைகள் இனி உங்கள் வாட்ஸ்அப்பில்!

சேலம் மக்களே பிறப்பு/இறப்பு சான்றிதழ், வருமான சான்று, பட்டா, சொத்துவரி, வேளான் திட்டங்கள்,மாணவர்களுக்கு உதவித்தொகை மற்றும் மின்சாரக் கட்டணம் செலுத்துதல் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட அரசு சேவைகளை இனி வாட்ஸ்அப் மூலமாகவே பொதுமக்கள் எளிதாகப் பெறலாம். இதற்காகத் தமிழக அரசு 7845252525 என்ற பிரத்யேக வாட்ஸ்அப் எண்ணிற்கு ‘Hi’ என மெசேஜ் அனுப்பினால் போதும். இதனை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!


