News December 24, 2025
வேலூர்: துப்பாக்கியை விட்டுவிட்டு தலைதெறிக்க ஓடிய 3 பேர்!

வேலூர்: அரியூர் போலீசார் நேற்று ஊசூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள முந்திரி தோப்பில் 3 பேர் நின்று கொண்டிருந்தனர். போலீசாரை கண்டதும் அவர்கள் பைக்கை அங்கேயே விட்டு தப்பி ஓடினர். இதையடுத்து பைக்கை சோதனை செய்த போது நாட்டு துப்பாக்கி இருந்தது. தொடர்ந்து நாட்டு துப்பாக்கி, பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்து தப்பி ஓடிய நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
Similar News
News January 20, 2026
வேலூர்: முருங்கைக்காய் விலை உயர்வு!

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தற்போது பனிப்பொழிவு காரணமாக முருங்கைகாய் விளைச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் வேலூர் நேதாஜி காய்கறி மார்க்கெட்டிற்கு குறைந்தளவே முருங்கைக்காய் விற்பனைக்கு வருகிறது. எனவே அவற்றின் விலை கிலோ ரூ.300 முதல் ரூ.350 வரை விற்பனை செய்யப்படுகிறது. அதைத்தவிர மாங்காய், பூண்டு விலை சற்று அதிகரித்துள்ளது என வியாபாரிகள் தெரிவித்தனர்.
News January 20, 2026
வேலூர்: உங்கள் ரேஷன் அட்டை ரத்தாக வாய்ப்பு

ரேஷன் அட்டையில் உள்ள உறுப்பினர்கள் e-KYC அப்டேட் செய்யாவிட்டால், அந்த குறிப்பிட்ட உறுப்பினரின் பெயர் நீக்கப்படவோ அல்லது ரேஷன் அட்டை முடக்கப்படவோ வாய்ப்புள்ளது. போலி அட்டைகளைத் தவிர்க்க, உண்மையான பயனாளிகளைக் கண்டறிய உங்கள் ரேஷன் கடைக்கு நேரடியாக சென்று கைரேகை வைத்து அப்டேட் செய்யவேண்டும். இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் அரசு உதவி எண் 1800 425 5901-ஐ அழைக்கலாம். உடனே இந்த தகவலை ஷேர் பண்ணுங்க.
News January 20, 2026
வேலூர்: டூவீலர் ஃபைனை கேன்சல் செய்ய! (CLICK)

வேலூர் மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <


