News December 24, 2025
விழுப்புரம்: கஞ்சா விற்ற வட மாநிலத்தவர்கள் கைது!

விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஆரோமா கார்டன் அருகே நேற்று, மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த ரிபான்ஸ்க் மற்றும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மகாதேவ் குமார் ஆகியோர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து தகவலறிந்த போலீசார் நேற்று இரண்டு போரையும் கையும் களவுமாக கைது செய்து, அவர்களிடம் இருந்து 2.3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
Similar News
News January 16, 2026
விழுப்புரம்:காணும் பொங்கலுக்கு இன்னும் பிளான் பண்ணலையா?

விழுப்புரம் மக்களே காணும் பொங்கலை கொண்டாடுவதற்கு நீங்கள் குடும்பத்துடன் செல்லவேண்டிய இடங்கள் 1.திருவக்கரை தேசிய புதைபடிவ (கல்) மரப் பூங்கா – விழுப்புரம், 2.மரக்காணம் கடற்கரை, 3.ஆரோவில், 4.மயிலம் முருகன் கோவில், 5.செஞ்சிக்கோட்டை மேற்கண்ட இடங்களுக்கு சென்று காணும் பொங்கலை சிறப்பாகவும், மகிழ்ச்சியாகவும் கொண்டாடுங்கள், மேலும், இதை சேர் பண்ணுங்க!
News January 16, 2026
விழுப்புரம்: சிலிண்டர் வைத்திருப்போர் கவனத்திற்கு!

கேஸ் சிலிண்டருக்கு மானியம் வருகிறதா? என்பதை SMS அனுப்பி தெரிந்து கொள்ளலாம். இண்டேன் சிலிண்டர் பயன்படுத்துவோர் ‘REFILL’ என டைப் செய்து 77189 55555 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். பாரத் சிலிண்டர் பயன்படுத்துவோர் 18002 24344 என்ற எண்ணுக்கும், எச்.பி. சிலிண்டர் பயன்படுத்துவோர் 1906 என்ற எண்ணுக்கும் அனுப்பி தெரிந்து கொள்ளலாம். மேலும், UMANG என்ற App மூலமும் தெரிந்து கொள்ளலாம். ஷேர் செய்யுங்கள்.
News January 16, 2026
திருவள்ளூர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

உலக பொதுமறையாம் திருக்குறளை எழுதிய திருவள்ளுவரை கௌரவிக்கும் விதமாக ஆண்டு தோறும் ஜன.16 ம் தேதி திருவள்ளுவர் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு
விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு வருவாய்த்துறை சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
நிகழ்வில் ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டனர்.


