News December 24, 2025
நீலகிரி: நல்ல சம்பளத்தில் அரசு வேலை… APPLY NOW

மத்திய அரசின் என்எல்சி இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள 575 அப்ரண்டிஸ் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு சம்பளமாக ரூ.12,524 முதல் 15,028 வரை பணிக்கேற்ப வழங்கப்படுகிறது. பிஇ, பிடெக், டிப்ளமோ கல்வித்தகுதி உள்ளவர்கள் <
Similar News
News December 27, 2025
நீலகிரி: ஹோட்டலில் பிரச்னையா? WHAT’S APP பண்ணுங்க

நீலகிரி மாவட்டத்தில் சாலையோர கடைகள், ஹோட்டல்களில் பஜ்ஜி, போண்டா, வடை, சிக்கன் 65 போன்ற உணவு பலகாரங்களை செய்தித்தாளில் பொதுமக்கள் வாங்கி பயன்படுத்த வேண்டாம். அவ்வாறு செய்தித்தாள்களில் உணவு வழங்கும் கடைகள் மீது உணவு பாதுகாப்பு நியமன அலுவலரிடம் 9444042322 என்ற எண்ணிற்கு வாட்ஸ் அப் மற்றும் எஸ்.எம்.எஸ் மூலம் புகாரளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
News December 27, 2025
நீலகிரியில் அதிகரிக்கும் கஞ்சா புழக்கம்!

நீலகிரி மாவட்டத்தில் நடப்பாண்டில் இதுவரை 148 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 38 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் கஞ்சா வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 13 நான்கு சக்கர வாகனங்கள், 13 இரு சக்கர வாகனங்கள் என மொத்தம் 26 வாகனங்கள் வரும் 29ஆம் தேதி அன்று ஊட்டியில் உள்ள மதுவிளக்கு அமலாக்க பிரிவு அலுவலகத்தில் ஏலத்தில் விடப்பட உள்ளது என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
News December 27, 2025
நீலகிரி: ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு!

நீலகிரி மக்களே ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால் ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க.


