News December 24, 2025
திருவாரூர்: பறவைகளை வேட்டையாடியவர் கைது

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை வனசரக பகுதியில் பறவைகளை வேட்டையாடி விற்பனை செய்ய முயன்ற விக்னேஷ் என்பவரை, வனத்துறை அதிகாரிகள் கைது செய்ததுடன் அவருக்கு 25,000 ரூபாய் அபராதமும் விதித்தனர். மேலும், விற்பனைக்காக கூண்டில் வைத்திருந்த கொக்கு, மடையன் போன்ற பறவைகளைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News January 13, 2026
திருவாரூர்: 2 நாட்கள் அரசு மதுபான கடைகள் விடுமுறை

வருகிற 16-ம் தேதி திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டும், 26-ம் தேதி நாட்டினுடைய குடியரசு தினத்தை முன்னிட்டும் இரண்டு நாட்கள் மாவட்டத்திலுள்ள அரசு மதுபான கடைகள் மற்றும் மதுபான கூடங்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதனை மீறி மதுபான கடைகள் மற்றும் மதுபானக்கூடங்கள் திறக்கும் பட்சத்தில் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
News January 13, 2026
திருவாரூர் மாவட்ட MLA-க்களின் தொடர்பு எண்கள்

திருவாரூர் மாவட்டத்தில் மொத்தமாக 4 சட்டமன்ற தொகுதிகள் அமைந்துள்ளன. அத்தொகுதி எம்.எல்.ஏ-க்களின் தொடர்பு எண்களை தற்போது அறிந்து கொள்ளலாம். 1. திருவாரூர் – பூண்டி கே.கலைவாணன் (9842432977), 2. நன்னிலம் – ஆர்.காமராஜ் (9842413434), 3. திருத்துறைப்பூண்டி – க. மாரிமுத்து (9443530487), 4. மன்னார்குடி – டி.ஆர்.பி.ராஜா (044-25671696). மறக்காமல் இதை SHARE செய்யவும்.
News January 13, 2026
திருவாரூர் SP காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு!

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் காவல் நிலையத்தில் நேற்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) திடீர் ஆய்வில் ஈடுபட்டார். காவல் நிலையத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகளை ஆய்வு செய்து பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளின் தற்போதைய நிலைகள் குறித்தும் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார். மேலும் காவல் நிலைய அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.


