News December 24, 2025

குமரி: 11 மணி நேரம் தாமதமாக புறப்பட்ட எக்ஸ்பிரஸ் ரயில்

image

கன்னியாகுமரி திப்புருகர் விவேக் எக்ஸ்பிரஸ் ரயில் கன்னியாகுமரியில் இருந்து மாலை 5.25 மணிக்கு புறப்பட்டுச் செல்வது வழக்கம். நேற்று இதன் இணைப்பு ரயில் வருவதில் காலதாமதம் ஏற்பட்டது. இதன் காரணமாக இந்த ரயில் இன்று காலை 5 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்டு சென்றது. 11 மணி நேரம் 35 நிமிடங்கள் தாமதமாக இந்த ரெயில் புறப்பட்டுச் சென்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Similar News

News December 30, 2025

குமரி: இளைஞருக்கு அரிவாள் வெட்டு!

image

நாகர்கோவில் பகுதியை சேர்ந்த கணேஷ் (26) மற்றும் இவரது நண்பர் சுரேஷுக்கும், கட்டையன்விளையை சேர்ந்த சிலருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு கட்டையன்விளை பகுதியில் கணேஷ், சுரேஷ் நின்று கொண்டிருந்த போது அங்கு வந்த கும்பல் கணேஷ்-ஐ அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியது. இது குறித்து பெனில் (27), ராஜு (29), வினு (31) ஆகிய மூவர் மீது வடசேரி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

News December 29, 2025

குமரி: இழப்பீடு வழங்க எம்.எல்.ஏ வலியுறுத்தல்

image

அகஸ்தீஸ்வரம் நாடான்குளம் – கொட்டாரம் இடைப்பட்ட பகுதியில் உள்ள பன்றி குன்று குளம் உடைந்து 50 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனை இன்று முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான தளவாய்சுந்தரம் பார்வையிட்டார். பின்னர் பாதிக்கப்பட்டுள்ள விவசாய நிலங்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

News December 29, 2025

குமரி: போஸ்ட் ஆபீஸ் வேலை அறிவிப்பு

image

இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள 30,000 கிராம அஞ்சல் பணியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று உள்ளூர் மொழியை எழுதவும், பேசவும் தெரிந்த 18 முதல் 40 வயதிற்குட்பட்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். ஆர்வமுள்ளவர்கள் <>இங்கே கிளிக் செய்து <<>>விண்ணப்பிக்கலாம். SHARE IT

error: Content is protected !!