News December 24, 2025
தாயுமானவர் திட்டம்: ரேஷன் கார்டுகளுக்கு புதிய தளர்வு

<<17336334>>’தாயுமானவர்’<<>> திட்டத்தில் ரேஷன் பொருள்கள் வழங்கும்போது கையெழுத்து பெற்றும் வழங்கலாம் என உணவுப் பொருள் வழங்கல் துறை இயக்குநர் சிவராசு தெரிவித்துள்ளார். வீடு வீடாக சென்று ரேஷன் பொருள்கள் வழங்கும்போது 4G சர்வர் அடிக்கடி பழுதாவதால் கைவிரல் ரேகை, கருவிழி சரிபார்ப்பதில் சிரமம் ஏற்படுவதாக புகார் எழுந்தது. இதனால், ரேஷன் ஊழியர்கள், பொதுமக்களின் கோரிக்கைகளை ஏற்று அரசு இந்த முடிவை அறிவித்துள்ளது. SHARE IT.
Similar News
News January 10, 2026
இது ‘வா வாத்தியார்’ பொங்கல்!

நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘வா வாத்தியார்’ படம் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டுடியோ கிரீன், ஏற்கெனவே வாங்கிய கடனுக்காக, ‘வா வாத்தியார்’ படத்தின் உரிமைகளை பொது ஏலம் விடுமாறு ஐகோர்ட் உத்தரவிட்டது. இந்நிலையில், அனைத்து பிரச்னைகளும் சரி செய்யப்பட்டதாகவும், ‘வா வாத்தியார்’ ஜன.14-ம் தேதி ரிலீஸ் செய்யப்படுவதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
News January 10, 2026
JMM போல் திமுக முடிவு எடுக்குமா?

கூட்டணி தொடர்பாக பொதுவெளியில் பேச வேண்டாம் என செல்வப்பெருந்தகை எச்சரித்த போதும், ‘ஆட்சியில் பங்கு’ முழக்கத்தை மீண்டும் மாணிக்கம் தாகூர் முன்வைத்துள்ளார். ஜார்க்கண்ட் அமைச்சரவையில் காங்., கட்சியினர் 4 பேர் இடம்பெற்றுள்ளதை சுட்டிக்காட்டிய அவர், இது சட்டமன்ற வலிமையை அடிப்படையாக கொண்ட நியாயமான அதிகார பகிர்வின் பிரதிபலிப்பு; இதுதான் மிகச் சிறந்த மற்றும் நிலையான கூட்டணி என குறிப்பிட்டுள்ளார்.
News January 10, 2026
உலகக் கோப்பை அணியில் இடமில்லை.. மனம் திறந்த கில்!

T20 உலகக் கோப்பை அணியில் இடம்பெறாதது குறித்து முதல் முறையாக ஷுப்மன் கில் மனம் திறந்துள்ளார். தேர்வாளர்களின் முடிவை மதிப்பதாக தெரிவித்த அவர், உலகக் கோப்பை அணியில் இடம்பெற்றுள்ள வீரர்களுக்குத் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். மேலும், நாட்டிற்காக விளையாடும் ஒவ்வொரு வீரரும் தனது சிறந்த பங்களிப்பை வழங்க முயற்சிப்பார்கள்; ஆனால் அணியைத் தேர்ந்தெடுக்கும் முடிவு தேர்வாளர்களை பொறுத்தது என அவர் குறிப்பிட்டார்.


