News December 24, 2025

தருமபுரி: மொட்டை மாடியில் கஞ்சா வளர்த்த ஆடிட்டர்!

image

தருமபுரி பழைய ரயில்வே லைன் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், சந்தேகத்தின் பேரில் சையது அகமது என்ற ஆடிட்டரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் தனது வீட்டின் மொட்டை மாடியில் பூத்தொட்டியில் 2கஞ்சா செடிகளை வளர்ப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கஞ்சா செடிகளைப் பறிமுதல் செய்து, சையது அகமதைக் கைது செய்தனர். இச்சம்பவம் குறித்து தருமபுரி டவுன் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Similar News

News December 28, 2025

தருமபுரி: லைசன்ஸ் எடுக்க இனி அலைய வேண்டாம்!

image

தருமபுரி மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல் https://<>parivahansewas.<<>>com/ என்ற இணையதளம் சென்று மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். (SHARE பண்ணுங்க).

News December 28, 2025

தருமபுரி: புறம்போக்கு நிலத்திற்கு பட்டா பெறுவது எப்படி?

image

ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் இலவச பட்டா பெறலாம். இந்த தகுதிகள் இருந்தால் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த சிறப்பு திட்டம் தெரிந்தவர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க!

News December 28, 2025

தருமபுரி: தூக்கில் பிணமாக தொங்கிய +2 மாணவன்!

image

நல்லம்பள்ளி அடுத்த தண்டுக்காரம்பட்டியைச் சேர்ந்த பிரணீத்குமார் (17). பிளஸ்-2 மாணவரான இவர், அரையாண்டுத் தேர்வு விடுமுறையில் வீட்டில் இருந்தபோது, நேற்று இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். காலையில் மாணவர் பிணமாகத் தொங்குவதைக் கண்டு பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்து வந்த தொப்பூர் போலீசார், உடலை மீட்டு தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

error: Content is protected !!