News December 24, 2025
சென்னை: பெண் மருத்துவருக்கு நேர்ந்த கொடுமை!

சென்னை அயனாவரத்தில் 30 வயது பெண் பல் மருத்துவர் குளிப்பதை, ஜன்னல் வழியாக நந்தகோபால் (56) என்பவர் செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மருத்துவர் அளித்த புகாரின் பேரில், கீழ்ப்பாக்கம் துணை கமிஷனர் ஜெரினா பேஹம் உத்தரவின்படி அயனாவரம் போலீசார் விசாரணை நடத்தினர். அதனடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார், நந்தகோபாலை உடனடியாகக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News January 15, 2026
சென்னை: பொங்கலுக்கு பொருட்கள் வாங்குவோர் கவனத்திற்கு…

பொங்கல் பண்டிகையையொட்டி பொதுமக்கள் கடைகளில் பொருட்கள் வாங்கி வருகின்றனர். வாங்கிய பொருட்களை கடை உரிமையாளர் மாற்றி தரவோ, பணத்தை திருப்பி தரவோ மறுத்தால் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் புகார் அளிக்கலாம். 15 நாட்களுக்குள் சேதமின்றி இருந்தால் மாற்றம் அல்லது பணம் திரும்ப வழங்க வேண்டும். விவரங்களுக்கு மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரை 044-28589055ல் தொடர்பு கொள்ளலாம்.
News January 15, 2026
சென்னை: 10th போதும்.. மத்திய அரசு வேலை ரெடி!

1. RBI-ல் Office Attendant பிரிவில் 572 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
2. இதற்கு 10th முடித்திருந்தால் போதும்.
3. மாத சம்பளம் ரூ.47,029 வரை வழங்கப்படும்.
4. விருப்பமுள்ளவர்கள் <
5. விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்.04. சூப்பர் வாய்ப்பு. மிஸ் பண்ண வேண்டாம். நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.
News January 15, 2026
சென்னையில் டாஸ்மாக் மூடல்

சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், தமிழ்நாடு மதுபானம் சில்லறை விற்பனை விதிகள் விதிகளின் கீழ் சென்னை மாவட்டத்தில் அனைத்து டாஸ்மாக் (எப்.எல்.1) சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனைச் சார்ந்த பார்கள், எப்.எல்.2 உரிமம் கொண்ட கிளப்புகளைச் சார்ந்த பார்கள், எப்.எல்.3 உரிமம் கொண்ட ஓட்டல்களை சார்ந்த பார்கள், நாளை மற்றும் 26ஆம் தேதி மூடப்படுகிறது என தெரிவித்திருந்தார்.


