News December 24, 2025
வேலூர்: நண்பனுடன் சென்ற சிறுவனுக்கு நேர்ந்த சோகம்!

குடியாத்தம் பகுதியை சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவரது மகன் மாதேஷ் (15). இவர் நேற்று தனது நண்பர் ராகேஷ் என்பவருடன் பைக்கில் சென்றார். கே.வி.குப்பம் மாச்சனூர் அருகே கட்டுப்பாட்டை இழந்து பைக் விபத்து ஏற்பட்டது. 2 பேரையும் மீட்டு அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மாதேஷை பரிசோதித்த டாக்டர்கள், அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News December 28, 2025
வேலூர்: மத்திய அரசில் வேலை அறிவிப்பு.. Salary ₹69,100!

1. எல்லை பாதுகாப்பு படையில் விளையாட்டு கோட்டாவின் கீழ் 549 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
2. கல்வி தகுதி: 10th முடித்திருந்தால் போதும்.
3. மாத சம்பளம் ரூ.21,200 முதல் ரூ.69,100 வரை அறிவிக்கப்பட்டுள்ளது.
4. விருப்பமுள்ளவர்கள் இங்கே <
5.விண்ணப்பிக்கும் கடைசி நாள் ஜன.15. நண்பர்களுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க.
News December 28, 2025
வேலூர்: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க
News December 28, 2025
வேலூர்: இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!

காட்பாடி அருகே பள்ளிக்குப்பம் குளத்துக்கரை தெருவை சேர்ந்தவர் கார்த்திக். இவரது மனைவி நித்யா (வயது 22). திருமணமாகி ஒன்றரை ஆண்டுகள் ஆன நிலையில் தம்பதிக்கு குழந்தை இல்லை. இதனால், இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் மன வேதனை அடைந்த நித்யா நேற்று வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து காட்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


