News May 1, 2024
வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைந்தது

வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடைகொண்ட சமையல் சிலிண்டர் விலை ₹19 குறைந்துள்ளது. அதன்படி, கடந்த மாதம் ₹1,930ஆக இருந்த நிலையில் இன்று முதல் ₹19 குறைக்கப்பட்டு ₹1911க்கு விற்பனையாகிறது. இந்த விலைகுறைப்பின் மூலம் சாலையோர, நடுத்தர, டீக்கடைக்காரர்கள், ஹோட்டல் கடைக்காரர்கள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர். வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை.
Similar News
News March 25, 2026
வேல்முருகன் துணையாக இருக்க வேண்டும்: அதிமுக

திமுக கூட்டணிக்கு எதிராக இத்தேர்தலை வேல்முருகன் சந்திக்க வேண்டும் என அதிமுக கொள்கைபரப்பு துணை செயலாளர் தமிழரசு அழைப்பு விடுத்துள்ளார். திமுக கூட்டணியில் இருந்து விலகிய வேல்முருகன், அதிமுக ஆட்சி அமைவதற்கு துணையாக இருக்க வேண்டும் எனவும் பேசியுள்ளார். திமுக அமைச்சர்கள் செய்த முறைகேடுகளுக்கு தன்னிடம் ஆதாரம் இருப்பதாக கூறி <<19449630>>ஏற்கெனவே வேல்முருகன்<<>> பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார் <<-se>>#TNElection2026<<>>
News March 25, 2026
போர்.. இந்தியாவுக்கு மகிழ்ச்சி செய்தி

மேற்காசிய போர் பதற்றத்துக்கு இடையே, ரஷ்யாவிலிருந்து 60 மில்லியன் பேரல்கள் கச்சா எண்ணெயை, இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் வாங்கியுள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. ஏற்கெனவே ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கான தடையினை US தற்காலிகமாக நீக்கியுள்ளது. இதனால் தட்டுப்பாடின்றி பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்கள் கிடைக்கும் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றன.
News March 25, 2026
சோனியா காந்திக்கு என்ன ஆச்சு? ரிப்போர்ட்

திடீர் உடல்நலக்குறைவு காரணமாக ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்ட சோனியா காந்தி தற்போது நலமுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து டெல்லி சர் கங்காராம் ஹாஸ்பிடல் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், சோனியா காந்திக்கு ஆஸ்துமா பிரச்னை உள்ள நிலையில் காற்று மாசு, குளிர் காரணமாக திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது; அவரது உடல்நிலையை தற்போது டாக்டர்கள் குழு உன்னிப்பாக கண்காணித்து வருகிறது என கூறப்பட்டுள்ளது.


