News December 24, 2025
வாழப்பாடியில் சம்பவ இடத்திலேயே பலி!

வாழப்பாடி ஆலடிப்பட்டி கிராமம் சிறுமலை பகுதியை சேர்ந்த கந்தன், கட்டிட கூலி வேலை செய்ய வந்தவர். இவர் பேளூருக்கு வேலைக்கு சென்ற போது, பேளூரில் இருந்து அறுநூத்துமலைக்கு செல்லும் பிக்-அப் வாகனம்அவரது இருசக்கர கந்தன் வாகனம் நேருக்கு நேர் மோதியது. விபத்தில் சம்பவ இடத்திலேயே கந்தன் உயிரிழந்தார். சம்பவம் குறித்து வாழப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News December 25, 2025
சேலம்: 8 ஆம் வகுப்பு படித்திருந்தால் அரசு வேலை!

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், ஓட்டுநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சம்பளமாக ரூ.19,500 முதல் 62,000 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க மற்றும் மேலும் விவரங்களுக்கு https://www.tnsec.tn.gov.in/ என்ற இணையத்தில் பார்வையிடவும். இதனை வேலை தேடுவோருக்கு ஷேர் பண்ணுங்க
News December 25, 2025
சேலத்தில் ஓராண்டில் 127 பேர் மீது குண்டர் சட்டம்!

சேலம் மாநகரில் குற்றங்களைக் குறைக்க கமிஷனர் அனில்குமார் கிரி உத்தரவின்படி, கடந்த ஜனவரி முதல் தற்போது வரை இதுவரை 127 குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்கப்பட்டுள்ளனர். இதில் ரவுடிகள், கஞ்சா வியாபாரிகள், திருடர்கள் மற்றும் சைபர் கிரைம் குற்றவாளிகள் அடங்குவர். குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு இத்தகைய கடுமையான நடவடிக்கை தொடரும் என போலீஸ் தரப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
News December 25, 2025
சேலத்தில் வசமாக சிக்கிய அரசு அதிகாரி!

சேலம் செவ்வாய்ப்பேட்டை கிராம நிர்வாக அலுவலர் (V.A.O) ராஜசேகரன், பாலாஜி என்பவரிடம் உறவினரின் இறப்புச் சான்றிதழ் வழங்க 2,000 ரூபாய் லஞ்சம் வாங்கியதாக கூறப்படுகிறது. விசாரணை மேற்கொண்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் ராஜசேகரனை பிடித்துக் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலம் மக்களே உங்களிடம் அரசு அதிகாரிகள் யாரேனும் லஞ்சம் கேட்டால் 0427-2418735 அழைத்து புகார் அளியுங்கள். இதனை ஷேர் பண்ணுங்க!


