News December 24, 2025
ஒவ்வொரு 3.25 விநாடிக்கும் ஒரு பிரியாணி

நடப்பாண்டில் ஸ்விக்கியில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவுப்பொருள்கள் லிஸ்ட்டில், தொடர்ந்து 10-வது ஆண்டாக பிரியாணி முதலிடம் பிடித்துள்ளது. இந்த ஆண்டில் ஒவ்வொரு 3.25 விநாடிகளுக்கும் ஒரு பிரியாணி என்ற வகையில், 9.3 கோடி பிரியாணி ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாக வருடாந்திர அறிக்கையில் ஸ்விக்கி தெரிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து பர்கர் 4.4 கோடி, பீட்சா 4 கோடி, வெஜ் தோசை 2.6 கோடி ஆர்டர்களை பெற்றுள்ளது.
Similar News
News January 12, 2026
பொங்கல் தொகுப்பு: பெண்கள் ஏமாற்றம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் 2.22 கோடி ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புடன் இலவச வேட்டி, சேலை வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், பெரும்பாலான கடைகளில் சேலை பற்றாக்குறை காரணமாக கடந்த 2 நாள்களாக வேட்டி மட்டுமே வழங்கப்பட்டு வருவதாக புகார்கள் எழுந்துள்ளன. இது குறித்து ரேஷன் ஊழியர்களிடம் கேட்டும் பதில் இல்லாததால், பெண்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.
News January 12, 2026
திமுக கூட்டணியில் ராமதாஸ்.. சமாதனமானாரா திருமா?

திமுக கூட்டணியில் அங்கம் வகிக்க <<18830863>>ராமதாஸ்<<>> பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அமைச்சர் ராஜகண்ணப்பன் நேற்று தெரிவித்து இருந்தார். இந்நிலையில், ராமதாஸ் வந்தால் திருமா கோபித்து கொள்வாரே என்ற சங்கடம் இருந்த நிலையில், வடமாவட்டத்தைச் சேர்ந்த மூத்த அமைச்சர் ஒருவரை சமரசம் பேச திமுக தலைமை தூது அனுப்பியுள்ளதாம். இருப்பினும், ராமதாஸ் தரப்பு 10+ தொகுதிகளை கேட்பதால், பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிக்கிறதாம்.
News January 12, 2026
7 மாவட்டங்களில் கனமழை பொளக்கும்

தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என IMD அறிவித்துள்ளது. அதன்படி கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 35-45 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


