News December 24, 2025
டிகிரியை வைத்து ஒன்றும் செய்திட முடியாது: கமல்

திருச்சியில் PEFI & கமல் பண்பாட்டு மையம் விருது நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பேசிய கமல்ஹாசன், விளையாட்டிலும், சினிமா தியேட்டரிலும் தான் சாதி ஒழிந்துள்ளது என்றார். விளையாட்டு வீரர்களும், இளைஞர்களும் அரசியலுக்கு வர வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். வெறும் டிகிரியை வைத்து ஒன்றும் செய்துவிட முடியாது என்ற கமல், அரசியல் விளையாட்டையும் ஆடிப் பார்க்க வேண்டும் என கூறினார்.
Similar News
News January 13, 2026
பொங்கல் பரிசு.. சோகச் செய்தி வந்தது

பொங்கல் பரிசுத் தொகையை அனைவரும் சந்தோஷமாக வாங்கிவரும் போது, ஒரு குடும்பத்திற்கு மட்டும் அது சோகத்தில் முடிந்துள்ளது. கோவை நாகராஜபுரம் அருகிலுள்ள ரேஷன் கடைக்கு சென்ற மூதாட்டி வீரம்மாள்(87) சாலையில் மயங்கியுள்ளார். இவரை ஹாஸ்பிடலில் அனுமதித்த போது அவர் உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் கூறியுள்ளனர். இப்படியான சூழலை தவிர்க்க முதியவர்களுக்கு வீடுகளுக்கே சென்று ₹3000 வழங்கலாமே எனக் கோரிக்கை வலுத்துள்ளது.
News January 13, 2026
அப்போ தோனி.. இப்போ கோலி!

NZ-க்கு எதிரான முதல் ODI-யின் போது, ரோஹித் அவுட்டாகி பெவிலியன் திரும்பும் போது, ரசிகர்கள் கோலியின் என்ட்ரிக்கு ஆரவாரம் செய்தனர். இந்நிலையில், ஒரு வீரர் அவுட்டாகி வெளியேறும் போது, ரசிகர்கள் தனக்கு உற்சாக வரவேற்பளிப்பது சரியல்ல என கோலி தெரிவித்துள்ளார். இதே போன்று தான் தோனிக்கும் ரசிகர்கள் ஆதரவு அளித்தனர் என குறிப்பிட்ட அவர், அவுட்டாகி வெளியேறும் வீரரின் மனநிலையை உணர வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
News January 13, 2026
Zomato-ல் ₹655.. நேரில் சென்று வாங்கினால் வெறும் ₹320!

பெண் ஒருவர் Zomato-ல் ஆர்டர் செய்த உணவுகளுக்கு, ₹655 பில் வந்துள்ளது. Discount-களுக்கு பிறகு, அவர் ₹550 கட்டியுள்ளார். இதே உணவுகளை அதே ஹோட்டலில், நேரில் வாங்கும் போது, ₹320 மட்டுமே பில் வந்துள்ளது. 2 பில்லையும் பதிவிட்டு, Zomato-ல் அதிக விலை வைப்பதாக விமர்சித்துள்ளார். இது ஹோட்டல் நிர்ணயிக்கும் விலை என Zomato பதிலளித்தாலும், நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.


