News December 24, 2025
தேர்தலில் ஒதுங்கியிருக்க மாட்டேன்: சசிகலா

கடந்த காலங்களில் சிலர் செய்த தவறின் காரணமாகவே திமுக ஆட்சிக்கு வந்துள்ளது என்று சசிகலா கூறியுள்ளார். சட்டப்பேரவை தேர்தல் பணிகள் தொடர்பாக நாள்தோறும் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருவதாக கூறிய அவர், 2026 தேர்தலில் நிச்சயம் ஒதுங்கியிருக்க மாட்டேன் என்றும் உறுதிப்பட தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நிச்சயம் அடுத்த ஆண்டு ஆட்சி மாற்றம் வரும் என்றும் சசிகலா கூறியுள்ளார்.
Similar News
News February 1, 2026
பட்ஜெட்டில் இந்த முக்கிய அறிவிப்பு இல்லை: பிரேமலதா

யானை பசிக்கு சோளப்பொறிதான் இந்த பட்ஜெட் என பிரேமலதா விமர்சித்துள்ளார். தங்கம் வெள்ளி விலை உயர்வை கட்டுப்படுத்த பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இல்லை என்று பேசிய அவர், அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வதால் வரி குறைப்பு போன்ற அறிவிப்புகள் இருந்திருக்கலாம் என்றார். அத்துடன், தேர்தல் நேரம் என்பதால் மக்கள் அதிகமாக எதிர்பார்த்ததாகவும், அதில் ஓரளவு மட்டுமே நடந்திருப்பது ஏமாற்றம்தான் எனவும் கூறியுள்ளார்.
News February 1, 2026
தைப்பூசம் விடுமுறை.. தமிழக அரசு கூடுதலாக அறிவித்தது

தைப்பூசம் விடுமுறையையொட்டி ஊர்களுக்கு செல்ல, சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் இருந்து 2 நாள்களாக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. தற்போது ஊருக்கு சென்றவர்கள் பணியிடங்களுக்கு திரும்ப ஏதுவாக, பல பகுதிகளில் இருந்து இன்று கூடுதல் பஸ்களை அரசு இயக்கி வருகிறது. சிறப்பு பஸ்களில் பயணிக்க ஆயிரக்கணக்கானோர் முன்பதிவு செய்துள்ளனர். TNSTC செயலி, இணையதளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்து நெரிசலின்றி பயணியுங்கள்!
News February 1, 2026
வளர்ந்த பாரதம் இலக்கை நோக்கிய பட்ஜெட்: நிர்மலா

2047-ல் வளர்ந்த பாரதம் என்ற இலக்கை எட்டுவதையும், உற்பத்தி துறை மேம்பாட்டையும் இலக்காக கொண்டு மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். பட்ஜெட் மூலம், 2026-27 நிதியாண்டில் இந்தியாவின் உள்கட்டமைப்பு துறையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி ஏற்படும் எனக் கூறிய அவர், மக்களுக்கு சிறந்த மருத்துவ சிகிச்சை கிடைக்க உதவிடும் வகையில் அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்தார்.


