News May 1, 2024

நீர் மோர் வழங்கிய மாநகராட்சி ஆணையர்

image

கோவை மாநகரில் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் இந்த வெயில் காலத்தில் பயனடையும் விதமாக மாநகரின் 5 மண்டலங்களில் பொதுமக்கள் அதிகம் கூடும் மொத்தம் 100 இடங்களில் தற்காலிக குடிநீர் தொட்டிகளை அமைத்துள்ளனர். இந்த தொட்டிகள் ஒவ்வொன்றும் மொத்தம் 1000 லிட்டர் கொள்ளளவு கொண்டவை. இதை தவிர நீர் மோர் பந்தல்களும் துவங்கப்பட்டுள்ளது. இன்று நீர் மோரை ஆணையர் வழங்கினார்.

Similar News

News August 25, 2025

கோவை:இளைஞர்களுக்கு ரூ.15,000 ஊக்கத்தொகை!

image

பிரதமரின் PMVBRY திட்டத்தின் கீழ், புதியதாக பணியில் சேரும் இளைஞர்களுக்கு ரூ.15,000 ஊக்கத்தொகை வழங்கப்படும். இ.பி.எப். பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களில் புதியதாக பணியில் சேரும் இளைஞர்கள் இந்த திட்டத்திற்கு தகுதியானவர்கள் ஆவர்.மேலும் விவரங்களுக்கு, https://pmvbry.epfindia.gov.in என்ற இணையதளத்தை அணுகலாம் என கோவை மண்டல தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (EPF) அறிவித்துள்ளது. இதனை ஷேர் பண்ணுங்க!

News August 25, 2025

போதை மாத்திரை விற்பனை செய்த 2 பேர் கைது

image

சாய்பாபா காலனி பகுதியில் போதை மாத்திரை விற்பனை செய்யப்படுவதாகக் காவல்துறையினருக்கு நேற்று தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு திடீர் சோதனை நடத்திய சாய்பாபா காலனி போலீசார், போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டிருந்த மனோஜ் குமார் (25), விஜய் (29) ஆகியோரைக் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 20 போதை மாத்திரைகளும், 150 கிராம் கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டன.

News August 25, 2025

கோவை: பாலியல் சீண்டல்.. ஆசிரியர்கள் மீது போக்சோ!

image

கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள ஒரு பள்ளியில் பணியாற்றும் இரு ஆசிரியர்கள், பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுவதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாணவிகள் பேசிய வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் அந்த 2 ஆசிரியர்கள் மீது போக்சோ உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!