News May 1, 2024
அமைச்சர் மீதான வழக்கு ஒத்திவைப்பு

விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில், வானூர் அடுத்த பூத்துறை கிராமத்தில், செம்மண் குவாரியில் விதிகளை மீறி அதிக அளவில் செம்மண் அள்ளியதாக அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கௌதம சிகாமணி எம்பி உள்ளிட்ட 8 பேர் மீது வழக்கு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று (ஏப்.30) நடைபெற்ற விசாரணையை தொடர்ந்து வழக்கினை வரும் ஜூன் 3ஆம் தேதி ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
Similar News
News July 5, 2025
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆட்சியரிடம் மனு

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் மூலம் பிரதமர் மற்றும் தமிழக முதல்வருக்கு மனு கொடுக்கும் இயக்கம் நடைபெற்றது. விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்டச் செயலாளர் தோழர் ஆர். கலியமூர்த்தி தலைமையில் விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். உடன் மாவட்ட துணை செயலாளர் பாலசுப்ரமணியன் மாவட்டத் தலைவர் எம்.ஐ சகாபுதீன் கலந்து கொண்டனர் .
News July 4, 2025
விழுப்புரம்: இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (ஜூலை 4) இரவு 10:00 மணி முதல் நாளை காலை 6:00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவல் அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம் அல்லது 100 அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது.
News July 4, 2025
விழுப்புரம்: போதைப் பொருள் விழிப்புணர்வு – எஸ்.பி பாராட்டு

விழுப்புரம் மாவட்டத்தில் ‘ போதையில்லா தமிழ்நாடு’ திட்டத்தின் மூலம் பல்வேறு அறக்கட்டளை சார்பில் 57 அரசு மற்றும் தனியார் பள்ளி கல்லூரிகளில் போதைப்பொருள் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனைப் பாராட்டி, மாவட்ட எஸ்.பி சரவணன் மனிதம் காப்போம் அறக்கட்டளை நிறுவனர் சந்துருவை நேரில் அழைத்து பாராட்டினார். உடன் சரோஜினி கல்வி அறக்கட்டளை நிறுவனர் அருள்ராஜ் பங்கேற்றார்.